வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சித்திரை மாதத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை

Updated On: April 22, 2025 12:37 PM
Follow Us:
chithirai mathathil enna seiyalam
---Advertisement---
Advertisement

சித்திரை மாதத்தில் செய்ய கூடாதவை

தமிழ் மாதம் மொத்தம் 12 இருக்கிறது. அதில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்புக்கு உரியதாக இருக்கிறது. உதாரணமாக சொல்லபோனால் ஆடி மாதம் அம்மனுக்கு உரியதாக இருக்கிறது. இந்த மாதத்தில் அம்மன் கோவிலில் கஞ்சி ஊத்துவார்கள்.  இந்த மாதம் ரொம்ப விசேஷமாக இருக்கும். அது போல புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரியதாக இருக்கிறது. இந்த மாதம் முழுவதும் பெருமாள் கோவில்களில் விஷேசமாக இருக்கும். கோவில் விஷேசத்தை தாண்டி சில மாதங்களில் சுப காரியங்கள், செய்யலாம், செய்ய கூடாது என்று வகுத்து வைத்துள்ளார்கள். அந்த வகையில் சித்திரை மாதத்தில் என்ன செய்யலாம், என செய்ய கூடாது என்று அறிந்து கொள்ளலாம் வாங்க..

சித்திரை மாதம் செய்ய வேண்டியவை:

சித்திரை மாதத்தில் செய்ய கூடாதவை

சித்திரை மாதமானது வெயிலின் தாக்கமானது அதிகமாக இருக்கும். இந்த நாட்களில் வெளியில் வரவே முடியாது. உடல் அசதியாகவே இருக்கும். எப்போதும் தூக்க கலக்கம் இருந்து கொண்டே இருக்கும். பலருக்கும் இருக்க கூடிய சந்தேகம் என்னெவென்றால் இந்த மாதத்தில் சுப காரியங்கள் செய்யலாமா, செய்ய கூடாதா என்ற சந்தேகம் இருக்கும். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த பதிவில் அதற்கான பதிலை தெரிந்து கொள்வோம்.

சித்திரை மாதத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு, பெண் பார்த்தல் போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்ச்சிகளை தாரளமாக செய்யலாம். அது போல் எல்லா விதமான சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தையும் நடத்தலாம்.

மேலும் இந்த மாதத்தில் ஒரு மரமாவது நட வேண்டும். இதன் மூலம் நமக்கு புண்ணியம் கிடைக்கும். மரம் நடுவதன் மூலம் அனைவருக்கும் நிழல் தரக்கூடியதாக இருக்கிறது. பறவைகளுக்கு தங்கும் இடமாகவும் இருக்கும். நிழலினால் மனிதர்களுக்கு திருப்தியும், பறவைகளின் மகிழ்ச்சிக்கு உதவுவதால் நமக்கு புண்ணியம் கிடைக்கும்.

சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா? 

சித்திர மாதத்தில் செய்ய கூடாதவை:

சித்திரை மாதங்களின் புது வீடு கட்டி பால் காய்ச்ச கூடாது. அது போல புது வீட்டிற்கு நிலை வைப்பது, கான்கிரிட் போடுவது, கூரை போடுவது போன்ற எந்த விஷயத்தையும் செய்ய கூடாது. மேலும் செடி, கொடி, மரம் போன்றவற்றை வெட்ட கூடாது. கிணறு, குளம் போன்றவற்றை அமைக்க கூடாது. நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்பு வேலைகளை செய்ய கூடாது.

முடி இறக்குதல், காது குத்துதல், புது வீட்டுக்கு குடிபோய் பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் செய்தல், பூமி பூஜை செய்வது கூடாது. விவசாய வேலைகள் தொடங்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். உங்களின் உடல் ஆரோக்கியத்திற்காக வண்டியில் நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

வழங்க வேண்டிய தானம்:

இந்த அக்கினி நட்சத்திர காலங்களில் நீர் பந்தல், மோர் பந்தல், தயிர் சாதம் போன்ற அன்னதானங்கள் செய்வது நல்லது. இதன் மூலம் புண்ணியம் கிடைத்து நமக்கு நன்மையை தரக்கூடியதாக இருக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now