சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா? | Chithirai Mathathil Kulanthai Piranthal

Chithirai Mathathil Kulanthai Piranthal

சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் நல்லதா? | Chithirai Matham Kulanthai Piranthal in Tamil

சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை அந்த குடும்பத்தையே ஆட்டி படைக்கும் என்பார்கள். குழந்தை பிறப்பதை எல்லோரும் வரமாக தான் பார்ப்பார்கள். அதிலும் பெண் குழந்தையை விட ஆண் குழந்தை பிறந்துவிட்டால் அதிக வரவேற்பு இருக்கும். சித்திரை நட்சத்திரத்தை நட்சத்திர சிந்தாமணி, ஒற்றை நட்சத்திரம் என குறிப்பிடுகிறது. ஒரு வட்டத்தின் நடுப்புள்ளி போன்று தோற்றம் அளிப்பது. வெண்மையான வண்ணத்துடன் மிக அழகாகத் தோற்றம் அளிப்பதால், ‘சௌம்ய தாரா’ என்று இந்த நட்சத்திரம் அழைக்கப்படுகிறது. எல்லா சுப காரியங்களுக்கும் உகந்த நட்சத்திரம் இது. நாம் இந்த பதிவில் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா? கூடாதா அதற்கு நம் முன்னோர்கள் கூறி வைத்த அர்த்தத்தை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

பங்குனி மாதம் குழந்தை பிறந்தால் என்ன பலன்..!

சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் என்ன ஆகும்:

 

சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் என்ன ஆகும்

சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது, இதனால் கருவை கலைப்பது, மீறி பிறக்கும் குழந்தையின் மீது அதிக வெறுப்பினை காட்டுதல் போன்றவை மூட நம்பிக்கையாகும்.

கர்ப்பம் தரிப்பதற்கோ அல்லது குழந்தை பெறுவதற்கோ இந்த மாதம் தான் உகந்த மாதம் என்று எதுவும் இல்லை. வருடத்தின் எல்லா நாட்களுமே தாய்மார்கள் கர்ப்பம் தரிக்கலாம், குழந்தையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆடி மாதத்தில் தம்பதிகள் சேரக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறி வைத்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு அதனை என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம்.

பௌர்ணமி அன்று குழந்தை பிறந்தால்

சித்திரை மாதம் குழந்தை பிறந்தால்:

 சித்திரை மாதம் குழந்தை பிறந்தால்

ஆடி மாதத்தில் கர்ப்பம் தரிக்கும் போது பெரும்பாலும் குழந்தை பிறப்பு நிகழ்வானது சித்திரை மாதத்தில் தான் நடக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரையிலும் சித்திரை மாதத்தில் தான் அக்னி நட்சத்திரம் என்பது ஆரம்பமாகும்.

அந்த காலத்தின் போது வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். குழந்தைகளுடைய சருமம் மிக மென்மையாக இருப்பதால் வெயிலைத் தாங்க முடியாமல் தோல் சிவந்துவிடும். மேலும், தாய்ப்பால் மட்டுமே உட்கொள்ளும் குழந்தைக்கு உடலில் நீர்வற்றி, உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது.

சின்னச் சின்ன சூட்டுக் கொப்புளங்கள் உடல் முழுவதும் உண்டாகும். சமயங்களில் அம்மை போடுவதற்கும் வாய்ப்பு உண்டு.

வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தால் என்ன பலன்

 

 chithirai mathathil kulanthai piranthal

குழந்தை என்றாலே தூக்கி கொஞ்சும் பழக்கம் எல்லோருக்குமே இருக்கும் குழந்தையை நிறைய பேர் தூக்கிக் கொஞ்சுவதால் தொற்றுநோய்களும் ஏற்படலாம். அதே போல தாய்க்கும் அதிக வெப்பம் மற்றும் வியர்வையால் நாவறட்சி, மயக்கம், வாந்தி உண்டாகலாம். இது அதிகமாகும் போது பக்கவாதம் மற்றும் ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைதல் போன்ற பெரிய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

இது மாதிரியான பிரச்சனைகளை எல்லாம் தவிர்ப்பதற்கு தான் சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பதை வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள்.

பிரதோஷம் அன்று குழந்தை பிறந்தால் என்ன பலன்?

 

மருத்துவ வசதிகள் எவ்வளவோ அதிகரித்துவிட்ட இன்றைய நவீன காலத்தில் மூட நம்பிக்கைக்கும், அச்சத்துக்கும் அவசியம் இல்லை. சில சமயங்களில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால், அதைத் தீர்ப்பதற்குத் தேவையான நவீன மருத்துவ வசதிகள் தற்போது உள்ளன.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்