சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் தெரியுமா..?

Advertisement

Chithirai Natchathiram

மனிதர்களை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் தனித்தனி விருப்பங்கள் மற்றும் ஆசைகள் என்பது இருக்கும். இத்தகைய விருப்பங்கள் அனைத்தும் ஒன்று போல் காணப்படுமா என்று கேட்டால் அது கிடையாது. இதனை போல தான் ஆன்மீகத்தில் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரங்களின் குணம் முதல் பலன்கள் வரை என அனைத்தும் மாறுபடும். சிலருக்கு இத்தகைய அடிப்படை விஷயங்கள் மற்ற சிலருக்கு தெரியாமல் இருக்கும். அதனால் இன்று கன்னி ராசியில் முதல் 2 பாகங்களையும், துலாம் ராசியில் மற்ற 2 பாகங்களையும் கொண்டிருக்கும் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம், கல்வி, திருமண வாழ்க்கை மற்றும் பொருந்தக்கூடிய ராசிகள் எது என்று முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

சித்திரை நட்சத்திரம் குணங்கள்:

 சித்திரை நட்சத்திரம் குணங்கள்

  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் பகவான் அதிபதியாக இருப்பதால் முன்கோபம் உள்ளவராக இருப்பார்கள். ஆனால் எந்த செயலை செய்யும் முன்பும் பின் வருவதை அறிந்து செயல்படும் திறன் கொண்டவராக இருப்பார்கள்.
  • அனைவரின் மீதும் நல்ல மரியாதை மற்றும் அன்பு கொண்டு இத்தகைய உறவு முறையில் பிரச்சனைகள் எதுவும் வராது அளவிற்கு பார்த்து கொள்வீர்கள்.
  • எந்த ஒரு செயலை செய்தாலும் அதனை முழுமையாக செய்து முடித்து வெற்றி கண்ட பிறகே மற்ற செயலை செய்ய வேண்டும் என்ற குணம் கொண்டவராக திகழ்வார்கள்.
  • வியாபாரம் அல்லது சொந்தமாக தொழில் செய்து மற்றவரை நம்பி இல்லாமல் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு இருப்பீர்கள்.
  • அதேபோல் சுறுசுறுப்பிற்கு ஒரு உதாரணமாகவும், சோம்பேறித்தனம் இல்லாமலும் செயல்படுவீர்கள்.
  • பிடிவாத குணம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும் கூட பேச்சில் நன்கு வல்லமை பெற்றவராக இருப்பீர்கள்.
  • பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனபக்குவம் கொண்டவராக இருப்பீர்கள்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் தெரியுமா

சித்திரை நட்சத்திரம் கல்வி:

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையினை செய்ய மாட்டார்கள். ஆனால் அறிவியல் சார்ந்த வேலையில் அதிக நாட்டம் காணப்படும். 

மேலும் கிராபிக் டிசைனிங், ஸ்கிரிப்ட் ரைட்டர், ஓவியர், தியேட்டர் தொடர்பான துறைகள், மருந்துகள் தொடர்பான துறைகள் மற்றும் ஃபேஷன் டிசைனர் ஆகியவை வாஸ்துப்படி ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

சித்திரை நட்சத்திரம் திருமண வாழ்க்கை:

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கூட்டு குடும்பத்தினை விரும்பும் குணம் கொண்டவராக இருப்பார்கள். இதற்கு ஏற்றவாறு குடும்பத்தில் உள்ள அனைவரின் மீதும் அளவுகடந்த அன்பினை கொண்டிருப்பார்கள்.

மேலும் பிள்ளைகளுக்கு நல்லவற்றை சொல்லி கொடுத்து பெருமிதம் சேர்க்க வேண்டும் விரும்பும் தன்மை கொண்டவராக இருப்பீர்கள்.

சித்திரை நட்சத்திரம் தொழில்:

தொழிலை பொறுத்தவரை ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற ஆசையும் அதற்கான கவலை மற்றும் திட்டமிடுதல் அதிகமாகவே இருக்கும். அதுபோல் தொழில் முதல் இடத்தில் இருப்பதை மட்டுமே விரும்புவீர்கள். இதற்கு உகந்தவாறு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல நிதிநிலை காணப்படும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் இப்படி தான் இருக்குமா.. 

அதிர்ஷ்டமான எண், மந்திரம் மற்றும் நிறம்:

அதிர்ஷ்டமான நிறம்:

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் இளஞ்சிவப்பு ஆகும்.

அதிர்ஷ்டமான எண்:

3, 6, 9 ஆகிய மூன்று எண்களும் அதிர்ஷ்டமான எண்ணாகும்.

அதிர்ஷ்ட கல்:

இத்தகைய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த மற்றும் ராசியான கல் பவளக்கல் ஆகும்.

சித்திரை நட்சத்திரத்திற்கு பொருந்தும் நட்சத்திரங்கள்:

ஆண் நட்சத்திரம்:

சித்திரை நட்சத்திரம் (பாதம் 1 மற்றும் 2)- திருவோணம், ஆயில்யம் மற்றும் விசாகம் 4.

பெண் நட்சத்திரம்:

சித்திரை நட்சத்திரம் (பாதம் 1 மற்றும் 2)- மகம், கார்த்திகை 1 பாதம், 2 பாதம் மற்றும் 3 பாதம்.

மேலே சொல்லப்பட்டுள்ள திருமண பொருத்தங்கள் கன்னி ராசி சித்திரை நட்சத்திற்கும் பொருந்தும்.

துலாம் ராசி ஆண் நட்சத்திரம்:

சித்திரை நட்சத்திரம் (பாதம் 3 மற்றும் 4)- விசாகம், ஆயில்யம், திருவோணம் மற்றும் சதயம்.

துலாம் ராசி பெண் நட்சத்திரம்:

சித்திரை நட்சத்திரம் (பாதம் 3 மற்றும் 4)- கார்த்திகை 1 பாதம் மற்றும் மகம்.

மேலே சொல்லப்பட்டுள்ள நட்சத்திரங்கள் அனைத்தும் கன்னி ராசி சித்திரை நட்சத்திரத்திற்கு பொருத்தமான ராசி ஆகும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement