வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சித்ரா பௌர்ணமி தேதி நேரம் மற்றும் பூஜை முறை

Updated On: April 28, 2026 5:39 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

சித்ரா பௌர்ணமி தேதி

தமிழ் மாதத்தில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்பு பெற்றது. மற்ற நாட்டவர்கள் வருட கணக்கை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே நம் முன்னோர்கள் சூரியன் மற்றும் சந்திரனின் அசைவுகளை வைத்து மாதங்களை கணக்கிட்டு வந்தனர். அப்படி கணக்கிடப்பட்ட 12 மாதங்களில் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதமான சித்திரை மாதத்தை முதல் மாதமாக கருதினார்கள். இந்த மாதத்தில் எல்லாமே மிக சிறப்பு வாய்ந்தவை தான் அதிலும், சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு தனி சிறப்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த பதிவில் சித்ரா பௌர்ணமி எப்போது வருகிறது, அதனுடைய நேரம் பற்றி அறிந்து கொள்வோம்.

Chitra Pournami 2026 Date and Time:

மே  01, 2026, வெள்ளிக்கிழமை அன்று சித்ரா பௌர்ணமி வருகின்றது. இந்த திருவிழாவில், பக்தர்கள் புனித நதிகளில் நீராடுவது தங்கள் பாவங்களை கழுவுவதை அடையாளப்படுத்துகிறது. இது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சித்ரா நதியில் வழக்கமாக உள்ளது. மற்ற ஊர்களிலும் இந்த திருவிழா நடைபெறுகிறது.

2026 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் தேதி  வெள்ளிக்கிழமை பூஜை நேரங்களை கடைபிடிப்பதன் மூலம் சித்ரகுப்தரின் ஆசீர்வாதத்தைப் பெறலாம்.

பௌர்ணமி திதி ஆரம்பம் – ஏப்ரல் 30, 2026 அன்று இரவு  09:12
பௌர்ணமி திதி முடிவடையும் தேதி – மே 01, 2026 அன்று இரவு 10:52

பௌர்ணமி சிறப்புகள்

சித்ரா பௌர்ணமி பூஜை:

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடும் விழாவாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்

சித்ரா பௌர்ணமி குறிப்பாக பெண்களால் கொண்டாடப்படுகிறது, இருப்பினும் இந்த நாளில் ஆண்களும் பூஜை செய்யலாம். பெண்கள் குளித்த பின், தங்கள் வீட்டின் நுழைவாயிலை சுத்தம் செய்து, அரிசி மாவினால் கோலமிட்டு, கடவுளை அலங்கரிப்பார்கள். அதன் பிறகு கடவுளை வணங்க வேண்டும். இப்படி வணங்குவதால் குழந்தை பாக்கியம், திருமண வரம் மற்றும் உங்களின் ஏழு தலைமுறையையும் காக்கும் என நம்பப்படுகின்றது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now