சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்
பௌர்ணமி என்றால் முழுமை என்று பொருள் .அதுவும் தமிழ் வருடத்தில் முதல் மாதமான சித்திரை மாதமும், சித்திரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒன்றினையும் நாளே சித்ரா பௌர்ணமி ஆகும். இது சித்திரப்பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் சூரியனின் மறைவும் சந்திரனின் உதயமும் இன்றைய தினத்தில் ஒரே நேரத்தில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச் சிறப்பானதோ, அதே அளவு சிறப்பானது திருவண்ணாமலை கிரிவலம் வந்து வணங்குவது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கிறது. அருணாசலேசுவரரை மனதில் நினைத்து, கிரிவலம் வருவதன் மூலம் உடலும் உள்ளமும் நலம் பெறும். அதனால் சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் பற்றி பதிவிட்டுள்ளோம். அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
சித்ரா பவுர்ணமி கிரிவலம்:
பொதுவாக கோவிலுக்கு செல்கிறார்கள் என்றால் அந்த கோவிலில் எப்போது சிறப்பு நேரம் அல்லது சிறப்பு பூஜை செய்வார்களோ அப்போது தான் அங்கு செல்வார்கள். அந்த வகையில் சாதாரணமாக நீங்கள் கிரிவலம் சென்றாலே அதற்கான நேரத்தை பார்த்து தான் செல்வீர்கள்.
அதுவும் பௌர்ணமி, இந்த நாளன்று திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்வதற்கு உகந்த நேரத்தை பார்ப்போம். நாளை 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை சித்ரா பவுர்ணமி அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 24- ம் தேதி புதன்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் 23- ம் தேதி முழுமையாக சித்ரா பவுர்ணமி என்பதால் அன்றைய தினம் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனது.
இந்த திருவண்ணாமலை கோவிலை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. இது பல சிறப்புகள் கொண்டது. இதனாலேயே இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இங்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
(Apr 2024) திருவண்ணாமலை கிரிவலம் 2024
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |