சித்ரா பௌர்ணமி விரதம் இருப்பது எப்படி
பௌர்ணமி என்றால் முழுமை என்று பொருள் .அதுவும் தமிழ் வருடத்தில் முதல் மாதமான சித்திரை மாதமும், சித்திரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒன்றினையும் நாளே சித்ரா பௌர்ணமி ஆகும். இது சித்திரப்பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் சூரியனின் மறைவும் சந்திரனின் உதயமும் இன்றைய தினத்தில் ஒரே நேரத்தில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு இந்து பண்டிகைகளுக்கும் விரதம் இருந்து வழிபடுவார்கள். அது போலத்தான் இந்த சித்ரா பௌர்ணமியும். இந்த நாளன்று விரதம் இருக்கும் முறையை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
சித்ரா பௌர்ணமி விரதம் இருக்கும் முறை:
சித்ரா பௌர்ணமி வீட்டை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி அலசி விட வேண்டும். அது ன் பிறகு பூஜை அறையை விநாயகர் படத்திற்க்கு முன் அரிசி மாவால் சித்ரகுப்தன் படத்தை வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் இருப்பது போல வரைய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் உப்பு இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டும்.
சித்ரா பௌர்ணமி அன்று என்ன செய்ய வேண்டும்
மாலை நேரத்தில் பூஜை செய்வது தான் வழக்கமானது. அதனால் அப்போது தலைவாழை இலை போட்டு அதில் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், சுண்டல் போன்றவை செய்து படைக்க வேண்டும். இந்த படையலில் எல்லா காய்கறிகளும் சேர்த்த கூட்டு செய்ய வேண்டும்.
அத ன் பிறகு இந்த இலையில் வெற்றிலைம் பாக்கு, வாழைப்பழம் சேர்த்து வைக்க வேண்டும். பக்தி, சாம்பிராணி போன்றவை காட்ட வேண்டும். அதன் பிறகு தீபாரதனை காட்ட வேண்டும். இந்த உணவுகளை மற்றவர்களுக்கு தானமாக வழங்க வேண்டும். மேலும் ஏழை மக்களுக்கு பேனா, பென்சில், நோட்டு போன்றவை மற்றவர்களுக்கு தானமாக வழங்கலாம்.
சித்ரா பௌர்ணமி விரதம் நன்மைகள்:
இந்த விரதம் இருப்பதால் திருமண தடை நீங்கும். குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த விரதம் மேற்கொள்வதால் குழந்தை வரம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை இருந்தால் அவை நீங்கும். மேலும் குடும்பத்தில் ஏதும் பிரச்சனை இருந்தாலும் அவை நீங்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |