வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சித்ரகுப்தர் மந்திரம்

Updated On: May 7, 2025 5:42 PM
Follow Us:
chitragupta mantra in tamil
---Advertisement---
Advertisement

Chitragupta Mantra in Tamil | சித்ரகுப்தர் ஸ்லோகம் | சித்ரகுப்தர் மூல மந்திரம்

பௌர்ணமி என்றால் முழுமை என்று பொருள் .அதுவும் தமிழ் வருடத்தில் முதல் மாதமான சித்திரை மாதமும், சித்திரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒன்றினையும் நாளே சித்ரா பௌர்ணமி ஆகும். இது சித்திரப்பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் சூரியனின் மறைவும் சந்திரனின் உதயமும் இன்றைய தினத்தில் ஒரே நேரத்தில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடும் விழாவாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது ஆன்மிகத்தில் நம்பிக்கையாக இருக்கிறது.  இந்நாளை சித்ர குப்தன் பிறந்தநாள் என்றும், சித்ர குப்தனின் திருமண நாள் என்றும் இரண்டு விதமான நம்பிக்கைகள் இருக்கிறது. இந்த பதிவில் சித்ரகுப்தர் மந்திரம் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

சித்ரகுப்தர் மூல மந்திரம்:

சித்ரகுப்தர் மூல மந்திரம்

இந்த உலகத்தில் வாழும் எல்லா உயிர்களும் மரணத்தை ஏற்படுத்தும், எமதர்மருக்கு உதவியாக இருப்பது சித்ரகுப்தர் தான். உயிரை பறிப்பது எமதர்மனாக இருந்தாலும், இந்த நாளில் தான் உயிர் போக வேண்டும் என்று நினைப்பது சித்ரகுப்தர் தான். மேலும் மனிதன் வாழும் காலத்தில் அவனுக்கு நரகமா, சொர்க்கமா என்பதை தீர்மானிப்பதும் சித்ரகுப்தர் தான். இப்படிப்பட்டவரை நாம் தினமும் வழிபடுகிறமோ என்று கேட்டால் இல்லை. மற்ற தெய்வங்களை வழிபடுவது போல நாம் சித்ரகுப்தரை வழிபட மாட்டோம். அதனால் இந்த சித்ரா பெளணர்மி அன்று ஆவது வழிபடுங்கள். மரணத்தை பற்றி பயத்தை இவரை வழிபடுவதன் மூலம் நாம் விடுபடலாம். நீங்கள் நாட்ராய தினம் இவரை வழிபடும் போது சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம்

லேகணிபத்த தாரிணம்

சித்தர ரக்னாம்பரதரம்

மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்

நல்ல அறிவாற்றலையும் திறமையான சிந்தனையையும் கொண்டவரே, எழுத்தாணி, ஏடு இவைகளை கையில் தாங்கிக் கொண்டிருப்பவரே, நவரத்தினத்தாலான உடையை அணிந்து இருப்பவரே, அனைத்து உயிர்களையும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் நடுநிலைமையுடன் நீதி கூறும் அரசரே உங்களை மனதார வேண்டுகிறோம்.

மேலே கூறியுள்ள இந்த மந்திரத்தை தினந்தோறும் உங்களால் கூறமுடியவில்லை என்றாலும்  வாரம் ஒரு முறையாவது சித்ரகுப்தரை மனதார நினைத்து வழிபடுவது நல்லது. அதிலும் சித்ரா பௌர்ணமி அன்று இந்த மந்திரத்தை கூறி உப்பில்லாத உணவை சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். இப்படி இருப்பதன் மூலம் மரண பயத்திலிருந்து விடுபடலாம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now