Chithirai Pournami Special Chitrannam In Tamil
சித்திரை பௌர்ணமி தமிழ் மக்களால் பரவலாக கொண்டாடப்படும் ஒரு நாள். அன்று கோவிலுக்கு செல்வது . வீட்டிலே தெய்வ வழிபாடு செய்வது என மக்கள் அன்று மிகவும் பக்தியுடன் காணப்படுவார்கள். சித்திரை பௌர்ணமி அன்று வீட்டில் நிறைய சாப்பாடுகள் செய்வார்கள். ஆனால் சித்ரான்னம் தான் சித்திரை பௌர்ணமியின் வழிபாட்டில் முக்கியமான உணவாகும். சித்ரான்னத்தை சித்திரை பௌர்ணமி அன்று தெய்வத்திற்கு படைப்பாதல் நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த சித்ரான்னத்தை தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கர்நாடகாவிலும் சித்திரை பௌர்ணமி அன்று செய்கிறார்கள். இதனை எப்படி செய்வது என பார்ப்போம்.
சித்ரான்னம் செய்ய தேவையான பொருட்கள் :
- எலுமிச்சை பழம் – 1
- பச்சை மிளகாய் – 2
- முந்திரி – 4
- மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
- பெருங்காய தூள் – 1 ஸ்பூன்
- கடலை பருப்பு – 1ஸ்பூன்
- கடுகு, வெள்ளை உளுந்து – 1 ஸ்பூன்
- கருவேப்பிலை – 1 கொத்து
- உப்பு
சித்ரான்னம் செய்யும் முறை :
- முதலில் 1 படி அரிசியை குலையாமல் விதையாக வடித்து எடுத்து கொள்ளுங்கள்.
- அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பிறகு கடுகு,வெள்ளை உளுந்து, கடலை பருப்பு இரண்டாக முந்திரியை பிளந்து போட்டு எல்லாவற்றையும் சிவந்து வரும் வரை வதக்கி விடவேண்டும் .
- பொன்னிறமாக சிவந்த பிறகு, மஞ்சள் தூள், கருவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காய தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.இப்போது எலுமிச்சை பழத்தின் சாறை சேர்க்க வேண்டும் உப்பு தேவையான அளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
- இப்போது வடித்த சாதத்தில் நல்லஎண்ணை 1 சப்பான் சேர்த்து பரவலாக கிளறி நன்றாக ஆற விடவேண்டும். இப்போது எலுமிச்சை சாறு கலவையை சேர்த்து நன்றாக கிளறி விடவும். இப்போது சித்ரான்னம் தயார். இது எலுமிச்சை சாதம் தான் ஆனால் சித்திரை பௌர்ணமி அன்று நிவேதியமாக அளிப்பதால் இதனை சித்ரான்னம் என்பார்கள்.
- சித்திரை பௌர்ணமி அன்று இந்த சித்ரான்னத்தை வீட்டிலே செய்து வழிபாடு செய்துவிட்டு எல்லோருக்கும் வழங்கினால் உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும். வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் சரி ஆகும்.
சித்ரா பௌர்ணமி விரதம் இருப்பது எப்படி
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |