சுக்ராதித்ய யோகத்தால் தொழிலில் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள் இதுதான்.! இதுல உங்க ராசி இருக்கா.?

Advertisement

சுக்ராதித்ய யோகம் 2024

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் செப்டம்பர் மாதம் உருவாகும் சுக்ராதித்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஜோதிடத்தின்படி, சூரியனும் சுக்கிரனும் இணைந்து இருப்பது சுக்ராதித்ய யோகத்தை உருவாக்கும். சூரியனை ஆதித்யன் என்றும் அழைப்பதால், சூரியனும் சுக்கிரனும் இணைவது சுக்ராதித்ய யோகம் எனப்படும். இது மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது.

செப்டம்பர் மாதத்தில் சில காலம் கன்னி ராசியில் சூரியனும் சுக்கிரனும் இணைவதால் சுக்ர ஆதித்ய யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். குறிப்பாக சுக்ராதித்ய யோகத்தால் 12 ராசிகளில் 4 ராசிக்காரர்கள்  அதிர்ஷ்டமான பலன்களை பெறப்போகிறார்கள். இதில் உங்க ராசியும் இருக்கிறதா என்பதை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

செப்டம்பர் மாதம் உருவாகும் சுக்ராதித்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்:

மேஷ ராசி:

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்ராதித்ய யோகம் அதிர்ஷ்டம் அளிக்கும் வகையில் இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை உண்டாகும். இக்காலத்தில் உங்கள் பணவரவு அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். இதுவரை கிடைக்காத லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். எனவே, அனைத்து வகையிலும் மேஷ ராசிக்காரர்களுக்கு  அதிர்ஷ்டமான பலன்களே கிடைக்கும்.

குருவின் வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்..!

கன்னி ராசி:

கன்னிராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் முழுவதும் நன்மைகள் மட்டுமே நடைபெறும். தொழில் பற்றிய நீண்ட கால கனவு இக்காலத்தில் நிறைவேறும். அதுமட்டுமில்லாமல், நீண்டகாலமாக இருந்துவந்த கடன் பிரச்சனை இந்த மாதத்தில் முடிவுக்கு வரும். பூர்விக சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும். எதிரிகளின் எண்ணிக்கை குறையும். பல காலமாக நீடித்து வந்த நீதிமன்ற வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். வியாபாரத்தில் நல்ல வருமானம் உண்டாகும்.

கடக ராசி:

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு சுக்ராதித்ய யோகத்தால் இந்த மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கிறது. எதிரிகள் கூட ஏதோவொரு வகையில் நன்மை செய்வார்கள். ஆன்லைன் பிசினஸ் மூலம் நிதிநிலைமை அதிகரிக்கும். தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு கிட்டும். தொழிலில் சில தடைகளுக்கு பிறகு, நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள்/புதிய தொடர்புகள் மூலம் நன்மை உண்டாகும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

விருச்சிக ராசி:

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்கார்களுக்கு சுக்ராதித்ய யோகம் அதிர்ஷ்டத்தை அளிக்கும். இம்மாதம் சாதனைகள் நிறைந்த மாதமாக இருக்கிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு வெளிநாடு பயணம் செய்வதற்கான வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் நிதிநிலைமை வலுவாகும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வும் புதிய பொறுப்பும் கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். எனவே, அனைத்து விதத்திலும் செப்டம்பர் மாதம் முழுவதும் சிறப்பான மாதமாக இருக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement