Crow Not Eating Food After Death In Tamil
காகத்திற்கு சாதம் வைப்பது தமிழர்களின் பழக்கமாகவே இருக்கிறது. சில நபர்கள் காகத்திற்கு தினமும் உணவு வைப்பார்கள். சில நபர்கள் விஷேச நாட்களில் மட்டும் காகத்திற்கு உணவு வைப்பார்கள். காகத்திற்கு சாதம் வைத்தால் நம்முடைய இறந்த முன்னோர்கள் காகம் ரூபத்தில் வந்து உணவு சாப்பிடுவார்கள் என்று கூறுவார்கள். அதனால் தமிழர்கள் காலம் காலமாக காக்கைக்கு உணவு வைத்து வருகிறார்கள். மாதத்தில் ஒரு முறை வரும் அமாவாசை நாளன்று அனைவரும் காகத்திற்கு உணவு வைப்பார்கள். காகம் வந்து உணவை சாப்பிட்ட பிறகு தான் அனைவரும் சாப்பிடுவார்கள். இந்த வகையில் நீங்கள் வைக்கும் சாதத்தை காகம் சாப்பிடவில்லை என்றால் அதற்கு அர்த்தம் என்ன என்று தெரியுமா? தெரியவில்லை என்றால் இந்த பதிவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
காகம் தலையில் தட்டினால் என்ன அர்த்தம் தெரியுமா.?
காகத்திற்கு உணவு வைப்பதனால் கிடைக்கும் பலன்கள்:
காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது, உங்கள் வாழ்வில் தீராத கடன் தொல்லைகள், புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும் தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்காக இருப்பது உங்கள் முன்னோர் வழிபாடுதான். இறந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் கூறுவார்கள்.
காகம் சாதத்தை சாப்பிடாமல் இருப்பதன் காரணம்:
காகத்திற்கு நாம் சாதம் வைத்து காகத்தை கூப்பிட்டாலே காகம் வந்து சாதத்தை சாப்பிடும். சில நேரம் காகம் வீட்டிற்கு வந்தாலும் வீட்டை பார்த்து விட்டு சாதத்தை சாப்பிடாமல் திரும்பி சென்று விடும். இதற்கு காரணம் உங்களுடைய முன்னோர்கள் உங்கள் மீது அதிக கோபத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதாவது நீங்கள் வழக்கமாக முறையாக உங்களுடைய பித்ருக்களுக்குத் திதி கொடுக்கிறீர்களா என்று யோசித்துப் பாருங்கள். அதனால் கூட, உங்கள் மீது கோபமாக இருக்கலாம்.
முன்னோர்கள் வழிபாடு:
இறந்து போன முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சில நபர்களுக்கு இறந்து போன முன்னோர்களின் திதி தெரியாமல் கூட இருக்கலாம், அதனால் கூட திதி கொடுக்காமல் இருப்பார்கள். இறந்த தேதி மறந்து போனால் பிரச்சனையில்லை. புரட்டாசி, தை, ஆடி அமாவாசை போன்ற இந்த மூன்று அமாவாசை நாட்களில் பித்ருக்களை நினைத்து வழிபட்டு, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய திதியைக் கொடுக்கலாம். அப்படி நீங்கள் திதி கொடுக்கத் தவறினால் கூட காகம் வந்து நீங்கள் வைக்கும் சாதத்தை சாப்பிடாது.
குலதெய்வ வழிபாடு:
சில நபர்கள் தங்கள் குலதெய்வம் யார் என்றே தெரியாமல் இருக்கிறார்கள். நீங்கள் பாவங்களில் அதிக பாவம் குலதெய்வத்தை மறப்பது தான். இதனால் உங்கள் குலதெய்வம் உங்கள் மீது கடுங்கோபத்தில் இருக்கும். உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று தொடர்ந்து 11 நாட்களுக்கு நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி, இதுவரை உன்னை வந்து பார்க்காமல் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடு என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
முன்னோர்கள் வழிபாடு, குலதெய்வ வழிபாடு போன்ற வழிபாடுகளை முறையாக செய்து வந்தாலே காகம் உங்கள் வீட்டிற்க்கு வந்து நீங்கள் அளிக்கும் உணவை சாப்பிடும்.கனவில் காகம் வந்தால் என்ன பலன்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |