Dasami is Good or Bad in Tamil
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தினை குறிப்பதே ஆகும். அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். பவுர்ணமி அன்று சூரியனும் சந்திரனும் நேர் எதிராக 180 டிகிரி தூர அளவில் இருப்பார்கள். திதி என்பது சூரியனிலிருந்து சந்திரன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார் என்பதை பற்றி விளக்கி கூறுவதே திதியாகும்.
இந்த திதிகளில் பல வகைகள் இருக்கிறது. ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு பலனை குறிக்கிறது. அதனை பற்றி தெரிந்து கொள்வதற்கு கீழே உள்ள லிங்கை செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும். எந்த திதியில் என்ன செய்யலாம் இந்த பதிவில் தசமி திதி நல்லதா கெட்டதா என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..
தசமி திதி நல்லதா கெட்டதா.!
தசமி திதி என்பது வைகாசி மாதத்தில் அமாவாசை பிறகு வர கூடியது தான் தசமி திதி. இதனை தசஹர தசமி’ என்றும் ‘பாவ ஹர தசமி’ என்றும் கூறுகிறார்கள்.
இந்த திதியானது பாத்து பாவங்களை நீக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. பத்து பாவங்கள் என்னென்ன என்று கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க..
- கடுமையாக ஒருவரை பேசுவது
- உண்மையை பேசாமல் இருப்பது
- மற்றவரை அவதூறாக பேசுவது
- மற்றவரை இளக்காரமாக பேசுவது
- மற்றவர்களின் பொருட்களை எடுத்து கொள்வது
- பிறரின் துணையை ஆசைப்படுவது
- மனதில் கெட்ட எண்ணங்களை நினைப்பது
- பொருட்களின் மீதும், மனிதர்களிடமும் பொய்யாக ஆசை வைத்தல்
- பிறரை துன்புறுத்துவது
- மற்றவர்களின் பொருட்களை திருடுவது
மேலே கூறியுள்ள 10 பாவங்களையும் தெரிந்தோ, தெரியாமல் செய்தாலோ அதனை இந்த தசமி திதி உதவுகிறது.
இந்த 10 பாவங்களையும் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பின் வரும் தசமி திதி அன்று சேதுவில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
வைகாசி அமாவாசை பின் வரும் தசமி திதியில் கங்கை நதியில் நீராடினால் பாவங்கள் நீங்கி அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று கந்தபுராணம் கூறுகிறது. இந்நாளில் நம்முடைய முன்னோர்களுக்கு பிதுர் பூஜை செய்வது, ஏழைகளுக்கு வஸ்திர தானம் போன்றவை செய்யலாம். மேலும் இதனோடு மட்டுமில்லாமல் அன்னதானம் செய்தால் கூடுதல் புண்ணியம் கிடைக்கும் என்றுகூறப்படுகிறது . அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று வேதநூல்கள் கூறுகின்றன.
ஆகவே தசமி திதியானது நல்லதாகவே இருக்கிறது.
எந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |