December Month Lucky Zodiac Sign 2023 in Tamil
பொதுவாக, கிரகங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே ஆன்மீகத்தில் 12 ராசிகளின் ராசிபலனும் கூறப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும். இவற்றின் பெயர்ச்சி ஆனது, 12 ராசிகளில் ஒரு சில ராசிகளுக்கு சுப யோகங்களையும் ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கும். எனவே, அந்த வங்கியில் தற்போது 2023 ஆம் ஆண்டின் இறுதியான டிசம்பர் மாதத்தில் பல்வேறு கிரகங்கள் பெயர்ச்சி அடைய உள்ளது. இதனால், அதிர்ஷ்டத்தை மட்டுமே பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இருமடங்கு அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள்:
டிசம்பர் மாதத்தில் சுக்கிரன், சூரியன், புதன், வியாழன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய போகிறது. எனவே, இதனால் ஒரு சில ராசிகளுக்கு மட்டும் பல சுப யோகங்கள் உருவாக உள்ளது. அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
துலாம் ராசி:
கிரகங்களின் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு லாபம் அளிக்கும் வகையில் உள்ளது. தொழில் செய்யும் துலாம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். மேலும், அரசு வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல செய்தி கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் அதிகரிக்கும்.
தனுசு ராசி:
தனுசு ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் உகந்த மாதமாக இருக்கிறது. இந்நேரத்தில் தனுசு ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். அதுமட்டுமில்லாமல், இக்காலம் தொழில் தொடங்க ஏதுவாக உள்ளது. திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். முக்கியமாக, கிரகங்களின் பெயர்ச்சி உங்களுக்கு இருமடங்கு லாபத்தை அளிக்கும்.
மேஷ ராசி:
மேஷ ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பெயர்ச்சி அதிர்ஷ்டம் அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. நீண்ட நாட்களாக உங்களுக்கு வரவேண்டிய பணம் இக்காலத்தில் உங்களை வந்து சேரும். முக்கியமாக, கல்வி சம்மந்தப்பட்ட துறையில் பணியாற்றுவபவர்களுக்கு இக்காலம் சிறப்பான ஒன்றாக இருக்கிறது. ஒரு சிலர்க்கு வெளி நாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல், நீண்ட நாட்களாக தடைப்பட்டு இருந்த காரியங்கள் அனைத்தும் இப்போது முடிவுக்கு வரும்.
மகர ராசி:
மகர ராசிக்கார்கள் இக்காலத்தில் வருமானத்தில் அதிக லாபம் பெறுவார்கள். முக்கியாக, மகர ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். எனவே, டிசம்பர் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.
துலாம் ராசியில் நுழைந்த சுக்கிரனால் குபேர யோகத்தை பெறப்போகும் 3 ராசிக்காரர்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |