டிசம்பரில் உருவாகும் 7 அபூர்வ யோகங்களால் இந்த ராசியினருக்கு இனிமேல் ராஜயோகம் தான்..!

Advertisement

December Month Palan in Tamil

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் மனிதர்களுக்கு ஒவ்வொரு மாதிரியான பலன்கள் அளிக்கும். அதேபோல் டிசம்பர் மாதத்தில் பல கிரகங்களின் இயக்கம் மாறுகின்றன. இதனுடன் கிரகங்களின் நிலை மாற்றத்தால் பல வகையான ராஜயோகங்கள் உருவாகின்றன. அதாவது டிசம்பர் 28-ம் தேதி புதன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். சுக்கிரன் ஏற்கனவே இருக்கும் இடம். ஜோதிட சாஸ்திரப்படி விருச்சிக ராசியில் புதன், சுக்கிரன் இணைவு சுப வீட்டில் நிகழும்போது லக்ஷ்மிநாராயண யோகம் உண்டாகும். இதனுடன் சுக்கிரன் கேந்திர திரிகோண ராஜயோகத்தையும் செய்கிறார்.

வியாழனுக்கும் சுக்கிரனுக்கும் சமசப்தக திருஷ்டி தொடர்பு உள்ளது. இதனால் சம்சப்தக ராஜயோகம் உண்டாகும். இதனுடன் சுக்கிரன் மற்றும் செவ்வாய் மீது சுப யோகம் உள்ளது. அப்படியானால் வியாழன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் காமயோகம் ஏற்படுகிறது. இதனுடன் தன சக்தி யோகமும், மகாதான ராஜயோகமும் உருவாக்குகின்றது. இதன் தாக்கங்கள் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் பலனை அளிக்கும். ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிக நல்ல பலனை அளிக்கும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை எல்லாம் பற்றி விரிவாக இன்றைய பதிவில் காணலாம் வாங்க..

துலாம் ராசியில் நுழைந்த சுக்கிரனால் குபேர யோகத்தை பெறப்போகும் 3 ராசிக்காரர்கள்

டிசம்பர் மாதத்தில் வாழ்க்கை டாப் கியரில் செல்ல போகின்ற 3 ராசிக்காரர்கள்:

இந்த டிசம்பர் மாதத்தில் பல கிரகங்களின் நிலை மாற்றம் அடைவதால் 7 அபூர்வ யோகங்களால் பலவகையான நல்ல பலன்களை அனுபவிக்க போகும் 3 ராசிக்காரர்கள் யார் அவர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்க போகின்றது என்பதை எல்லாம் பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

கன்னி ராசி:

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகங்கள் பல நன்மைகளை அளிக்க போகின்றது. அதிர்ஷ்டம் மற்றும் பணம் மிகுதியாக காணப்படும். பலமான ராஜயோகம் அமைவதால் புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.

மேலும் உங்களின் வெளிநாட்டில் பணிபுரியும் கனவும் நிறைவேறும். மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் உங்களின் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

தீராத கடனும் உடனடியாக தீர வெறும் 6 கிராம்பு மட்டும் போதும்

விருச்சிக ராசி:

விருச்சிக ராசி

விருச்சிக ராசியினருக்கு டிசம்பர் மாதம் முதல் புத்தாண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ராசியில் புதனும் சுக்கிரனும் இணைந்துள்ளனர். இதன் மூலம் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும்.

திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி வரும். தொழில் மற்றும் வியாபாரம் வளர்ச்சி பெரும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நிகழும். ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

மகர ராசி:

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு இந்த 7 ராஜயோகங்களும் மிக மிக சிறப்பான பலன்களை அளிக்கும். வராமல் இருந்த வருமானங்கள் கிடைக்கும். உங்களுக்கு இருந்த கடன் தொல்லைகல் அனைத்து நிறைவு பெரும்.

மேலும் பணவரவு அதிகரித்து உங்களின் சேமிப்பும் அதிகரிக்கும். அதேபோல் நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகள் மீண்டும் தொடங்கும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பும் உண்டு. குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் வாய்ப்புள்ளது.

தப்பித்தவறி கூட இந்த திசையில் காலண்டரை மாட்டிவிடாதீர்கள் அது எந்த திசை தெரியுமா

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement