உங்கள் கர்மவினை குறைவதற்க்கான அறிகுறிகள்..!

Advertisement

Decreasing The Karma In Life In Tamil

ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கும் கஷ்ட, நஷ்டங்கள், மகிழ்ச்சி அனைத்திற்கும் காரணமாக இருப்பது ஒரு மனிதனுடைய கர்மா தான். கர்மா என்பது ஒருவர் செய்தவை அவருக்கு திரும்ப கிடைப்பது. அவர் செய்தது நன்மை என்றால், நன்மையை பெறுவார். செய்த வினை தீமை என்றால், தீமையை பெறுவார். அதனால் நாம் செய்த தவறு யாருக்கு தெரியபோது என நினைக்காதீர்கள். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பதனை மறந்துவிடாதீர்கள். சரி இந்த பதிவில் நம் வாழ்வில்  கர்மா குறைவதற்கான அறிகுறிகளை பார்ப்போம்.

கர்ம வினை குறைவதற்கான அறிகுறிகள் என்னென்ன :

உங்களுடைய வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சனைகளும் குறைந்து கொண்டே வரும்.  உங்கள் வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் அதனை சமாளிக்கும் மன உறுதி கிடைத்துவிடும்.

அமைதியான மனம் :

பல நாளாக பதட்டம் மற்றும் மன அமைதி இல்லாமல் இருந்திருக்கும். சில நாட்களில் மனம் லேசாகும். மன அமைதியை ஆழ்மனதில் உணர்வீர்கள். இந்த அறிகுறிகள் இருந்தாலும் உங்களுடைய கர்மவினை குறைகிறது என்று அர்த்தம்.

அன்பான உள்ளம் :

எல்லா உயிர்களையும் தன்னை போல் நினைக்க ஆரம்பிப்பீர்கள். யாருடைய மனதையும் காயப்படுத்திவிட கூடாது என்பதில் கவனமாக இருப்பீர்கள். வாயில்லா ஜீவன்கள் மீது அதிக அன்பு கொள்வீர்கள். உங்கள் மனம் அன்பால் நிறைந்திருக்கும்.

ஆசையின் மீது பற்று இல்லாமல் போவது :

முன்பெல்லாம் அதிகம் ஆசை கொண்டிருப்பீர்கள். பின்னாளில் ஏன் இந்த ஆசையெல்லாம் என்று உங்களுக்குளே ஒரு கேள்வி உண்டாகும். உங்கள் மனதில் உள்ள தேவையில்லாத இச்சைகள் மேல் பற்று இல்லாமல் போகும். ஆனால் நீங்கள் முன்னாளில் எதிர்பார்த்தவை ஒன்று ஒன்றாக நடக்க ஆரம்பிக்கும். இதுவும் உங்களுடைய கர்மா குறைவதற்கான அறிகுறிகள்.

இறையுணர்வு :

நீங்கள் முன் செய்த தவறுகளை நினைத்து வருந்துவீர்கள். உங்களுக்குள் இருந்த பொறாமை கோபம், பகையுணர்வு ஆகியவை உங்களைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகும். நம்முடைய வாழ்வில் நடக்கும் அனைத்தையும் கடவுள் பார்த்து கொள்வார் என்ற பக்குவம் கிடைத்துவிடும். ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு காட்டுவீர்கள்.

மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் உங்களுக்கு நேர்ந்தால் உங்களுடைய கர்மா குறைகிறது என்று தான் அர்த்தம். இந்த குறிப்புக்கள் ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டவைகள். உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உங்களுக்கு வந்துவிட்டால் போதும். உங்கள் நிகழ்கால ,எதிர்கால, கடந்ததை நினைத்து பயம்கொள்ளாமல் தைரியமாக வாழ்க்கையை வாழுங்கள்.

கர்மா 9 விதிகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal
Advertisement