Deepavali Lakshmi Kubera Pooja in Tamil
தீபாவளி அன்று பூஜை செய்து புதிய புத்தாடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிப்போம். மேலும் அன்றைய நாள் பூஜை செய்வதன் மூலம் சகல ஐஸ்வர்யங்களும் பெற முடியும். அதில் ஒன்று தான் தான் லட்சுமி குபேர பூஜை. செல்வ வளங்களை வழங்கிடும் மகாலட்சுமியையும், குபேரனையும் வழங்குவது சிறப்பானது. அதில் முக்கியமானது எப்போது பூஜை செய்ய வேண்டும், எப்படி பூஜை செய்ய வேண்டும் என்று இருக்கிறது. அதன்படி பூஜை செய்தால் தான் முழுமையான பலனை பெற முடியும். அதனால் தான் இந்த பதிவில் லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
லட்சுமி குபேர பூஜை செய்வதற்க்கு உகந்த நேரம்:
- அதிகாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை
- காலை 09.13 மணி முதல் 10.43 மணி வரை
- மதியம் 01.13 மணி முதல் 01.28 மணி வரை
- மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை
- இரவு 08.00 மணி முதல் 09.00 மணி வரை
சுக்கிர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்ட போகிறது..
லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி.?
பூஜை அறையில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இரு புறமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். இந்த படத்திற்கு கீழே பெரிய வாழை இலை வைத்து நவதானியங்களை தனித்தனியாக வைக்க வேண்டும்.
இதன் நடுப்பகுதியில் ஒரு சொம்பில் முழுமையாக தண்ணீர் வைத்து விட வேண்டும். இந்த தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து கொள்ளவும். சொம்பு மேலே மாவிலை வைத்து அதன் நடுவில் தேங்காயை வைக்க வேண்டும். தேங்காயில் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து இலையில் வைக்க வேண்டும்.
நைவைத்தியமாக சர்க்கரை பொங்கல் மற்றும் பால் பாயாசம் போன்றவை வைத்து பூஜை செய்யலாம்.
உங்ககுக்கு தெரிந்த விநாயகர் பாடல் பாடி பூஜை செய்ய வேண்டும்.
அதன் பிறகு மகாலட்சுமியை வணங்குவதற்கு குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி தாமரை பூக்களால் பூஜை செய்ய வேண்டும்.
இந்த பூஜையை தீபாவளி அன்று செய்வதன் மூலம் வீட்டில் மகாலட்சமியின் அருள் கிடைத்து செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |