தீபாவளி நல்ல நேரம் 2023..| Deepavali Nalla Neram 2023

Deepavali Nalla Neram 2023

Deepavali Nalla Neram 2023

இந்துக்களின் பண்டிகைகளில் மிகவும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்படுவது தீபாவளி பண்டிகை ஆகும். கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம்  தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி தென் இந்தியாவில் ஒருநாள் பண்டிகையாகவும் வட இந்தியாவில் 5 நாள் பண்டிகையாகவும் கொண்டாப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. எனவே இந்நாளில் பூஜை செய்வதற்கு ஏற்ற நேரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தீபாவளி 2023:

2023 ஆம் ஆண்டில் தீபாவளி ஐப்பசி 26 ஆம் தேதி நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வருகிறது. பொதுவாக தீபாவளி பெரும்பாலும் அமாவாசை நாளில் தான் வரும். ஒரு சில வருடங்கள் மட்டுமே அமாவாசைக்கு முதல் நாள் தீபாவளி வரும். எனவே இந்த வருடம் அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி வருகிறது.

அதாவது, அமாவாசை திதி நவம்பர் 12 ஆம் தேதி மதியம் 2.44 PM மணிக்கு தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி மதியம் 2.56 PM மணிக்கு முடிவடைகிறது.

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி

லட்சுமி பூஜை முஹூர்த்தம்

12 நவம்பர் 2023, ஞாயிறு, மாலை 5.40 முதல் 7.36 வரை

நல்ல நேரம் 

காலை – 07 AM மணி முதல் 08 AM மணி வரை

மாலை – 03:15 PM முதல் 04:15 PM மணி வரை

ராகு காலம் 

மாலை – 04:30 PM முதல் 06:00 PM மணி வரை

குளிகை நேரம் :

மதியம் 03 PM மணி முதல் 04:30 PM வரை

எமகண்டம் நேரம்:

மதியம் 12 PM மணி முதல் 01:30 PM வரை

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்