இந்த தீபாவளியில் லட்சுமி தேவியின் அருளை பெற போகும் 4 ராசிக்காரர்கள்

பொதுவாக நம்மில் பலருக்கும் ஜோதிட சாஸ்திரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அதனால் நாம் அதில் கூறும் அனைத்தையும் நம்புவோம். அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களும் நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கின்றது. அவற்றால் தான் நமது வாழ்க்கை இயக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. அதனால் நவகிரகங்கள் தங்களது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றம் செய்தால் நமது வாழ்க்கையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் நவம்பர் 12-ம் தேதி தீபாவளி நன்நாள் அன்று அனைத்து ராசிக்காரர்களுக்கும் கிரகணங்கள் மாறும். இந்த கிரகண மாற்றத்தால் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் பலன் கிடைக்கும். ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு கூடுதலான பலன்கள் கிடைக்கும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதையெல்லாம் பற்றி விரிவாக இன்றைய பதிவில் காணலாம் வாங்க..

தீபாவளியில் அதிஷ்டத்தை காணும் ராசிகள்:

ரிஷிபம் :

ரிஷப ராசி

இந்த தீபாவளி ரிஷப ராசிக்காரர்களுக்கு அமோகமான பலன்களும், அதிர்ஷ்டமும் உண்டாகப்போகிறது. அதேபோல் மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி ஆனது நிலவும். மேலும் பொருளாதார நிலை ஆனது சிறப்பானதாக இருக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாதிரியான பலன்கள் வந்து சேரும். மேலும் எடுத்த காரியங்கள் விரைவில் பயன்தரும் விதமாகவும், வெற்றி அளிக்கும் விதமாகவும் முடியும்.

மேஷம்:

மேஷ ராசி

தீபாவளி அன்று ஏற்படும் கிரகணங்கள் சிறப்பான பலன்கள் ஆனது நடைபெறவிருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரை நல்ல முன்னேற்றமும், லாபமும் உண்டாகும்.

அதேபோல் இதுநாள் வரையிலும் இழுவையில் இருந்த கடன் பிரச்சனைகள் அனைத்தும் நல்ல நிலையில் முடிவுக்கு வந்து மகிழ்ச்சியை அளிக்கும். மேலும் அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு என்பது கிடைப்பதனால் புதிய வாய்ப்புகள் பல வந்து சேரும்.

மிதுனம்:

மிதுன ராசி

மிதுன ராசிக்கார்களுக்கு லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தால் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் செய்தி வந்து சேரும். உங்களது வாழ்வில் பொருளாதார நிலை முன்பை விட தற்போது அதிகமாக காணப்படும். அதேபோல் கஷ்டங்களும் நீங்கும்.

மேலும் நிதிநிலை சிறப்பாக இருந்தாலும் கூட தேவையற்ற செலவுகள் என்பது காணப்படும். ஆகையால் அதனை மட்டும் தவிர்ப்பது நல்லது. தொழிலை பொறுத்தவரை சாதகமான பலன்களே கிடைக்கும்.

கடகம்:

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலமானது மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக சிறப்பானதாக அமையும். இது நாள் வரையிலும் தடையில் இருந்த காரியங்கள் அனைத்தும் நீங்கி வெற்றி உண்டாகும். மேலும் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பானம் பலன்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். அதே சமயம் லாபமும் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

சிம்மம்:

சிம்ம ராசி

ராகு கேது பெயர்ச்சி சிம்ம ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்க போகிறது. இந்த நேரத்தில் நீங்கள் ஏதும் பிரச்சனையில் இருந்தால் அவை நீங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நிதிநிலைமையில் வளர்ச்சி காணப்படும். தொழிலில் வாடிக்கையாளர்கள் அதிகரித்து லாபமும் பார்ப்பீர்கள். திடீரென்று லாபம் கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசி

இந்த தீபாவளி கன்னி ராசிக்காரர்களுக்கு வளர்ச்சியை தர போகிறது. தொழில் செய்பவராக இருந்தால் இதுவரை இல்லாத லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள்.

நிலம் சம்மந்தமாக ஏதும் பிரச்சனை இருந்தால் அவை முடிவுக்கு வரும். அலுவலங்களில் வேலை பார்ப்பவருக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலும் சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் இந்த நேரத்தில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும்.

துலாம்:

துலாம் ராசி

 

மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த இந்த தீபாவளியில் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம். இந்த காலகட்டமானது முதலீடு செய்வதற்கு மிகவும் நல்ல நேரம்.

இந்த நேரத்தில், உங்கள் பேச்சுத் திறன் மேம்படும், இதன் காரணமாக பலர் உங்கள் பேச்சால் கவரப்பட்டு உங்களுடன் இணைவார்கள். இதனால் உங்களின் பொருளாதார நிலை உயரும்.

ஆடம்பரத்தின் அதிபதி சுக்ரனின் பார்வையால் எந்த 6 ராசிக்காரர்களுக்கு தீபாவளி நன்னாளில் பலன்கள் ஏற்படும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்