Dhanam Palangal in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக பல ஆன்மீக தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று தானம் செய்ய வேண்டிய பொருட்களும் அவற்றின் பலன்கள் பற்றிய தகவல்களை தான் பார்க்கப்போகின்றோம்.
பொதுவாக நாம் அனைவருமே நம் வாழ்க்கையில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களில் தானம் தர்மமும் ஓன்று. நாம் அனைவருமே நமக்கு தெரிந்தும் தெரியாமலும் மற்றவர்களுக்கு சில தானம் செய்திருப்போம். ஆனால் அதற்கு என்ன பலன் என்று நமக்கு தெரியாது. ஆகவே நம் பதிவின் வாயிலாக நாம் செய்யும் தானத்திற்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
உங்கள் நட்சத்திரத்திற்கு நீங்கள் என்ன தானம் செய்ய வேண்டும் தெரியுமா
தானங்களும் அவற்றின் பலன்களும்:
நாம் நம்மிடம் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை இல்லாதவருக்கு கொடுப்பதை தான் தானம் என்று சொல்கிறார்கள். அதுபோல நாம் கோவிலுக்கு பொருட்கள் வாங்கிக்கொடுப்பது, ஏழை மக்களுக்கு உதவி செய்வது போன்ற அனைத்துமே தானத்தில் தான் சேரும். ஆகவே ஒவ்வொரு தானத்திற்கும் என்ன பலன்கள் என்று பார்க்கலாம் வாங்க.
தானங்கள் | பலன்கள் |
அன்னதானம் | பூர்வ ஜென்ம கர்மவினைகள் நீங்கும், பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும், கடன் தொல்லைகள் நீங்கும். |
துளசி தானம் | தனவரவு அதிகரிக்கும், |
விதை தானம் | வம்ச விருத்தியை தரும் |
தானியங்கள் தானம் | மறுஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர். |
கோவிலுக்கு யானை தானம் | இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்வார். |
கோவிலுக்கு பல்லக்கு தானம் | இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார். |
பயன் கருத்தாமல் செய்யும் தானம் | மரணம் உன்னதமாக இருக்கும், மறுபிறவியும் கிடையாது. |
உணவு தானம் | குறைவில்லாத சுகம் உண்டாகும். |
தண்ணீர் தானம் |
மனசாந்தி ஏற்படும். |
அரிசி தானம் | பாவங்கள் விலகும் |
வஸ்திர தானம் | ஆயுளை விருத்தி செய்யும், சுகபோக வாழ்வு அமையும் |
பால் தானம் | துக்கம் நீங்கும், துன்பங்கள் விலகும் |
தயிர் | இந்திரிய விருத்தி ஏற்படும் |
நெய் தானம் | பிணிகள் நீங்கும், மோட்சம் கிட்டும், தேவதைகளின் அனுக்கிரகம் கிட்டும் |
கோதுமை தானம் | ரிஷிகடன், தேவகடன் மற்றும் பித்ரு கடன்களை நீக்கும் |
தேங்காய் தானம் | குடும்ப குழப்பங்கள் நீங்கும், நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் |
தீப தானம் | எதிர்பாராத யோகத்தை கொடுக்கும், முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும் |
தேன் தானம் | புத்திர பாக்கியம் கிட்டும், இனிய குரல் வளம் கிட்டும் |
பூமி தானம் | பிறவா நிலை உண்டாகும் |
பழங்கள் தானம் | மன அமைதி உண்டாகும், ஜீவன்களை வதைத்த சாபம் நீங்கும் |
வஸ்திர தானம் | ஆயுள் விருத்தி உண்டாகும் |
கம்பளி தானம் | பயத்தை போக்கும், துர் சொப்பனங்கள் நீங்கும் |
கோ தானம் | பித்ரு கடன் நீங்கும் |
தயிர் தானம் | இந்திரிய விருத்தி உண்டாகும் |
நெல்லிக்கனி தானம் | ஞானம் மற்றும் அறிவு மேம்படும் |
குடை தானம் | தவறான வழியில் செல்வம் சேர்த்த பாவங்கள் விலகும், எண்ணிய எதிர்காலம் உண்டாகும் |
பாய் தானம் | அமைதியான மரணம் உண்டாகும் |
காய்கறிகள் தானம் | குழந்தை ஆரோக்கியம் மேம்படும் |
பூ தானம் | விரும்பிய இல்வாழ்க்கை அமையும் |
சொர்ண தானம் | புண்ணியம் உண்டாகும் தோஷம் நிவர்த்தியாகும் |
வெள்ளி தானம் | கவலைகள் நீங்கும் |
எண்ணெய் தானம் | அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும், ஆரோக்கியம் உண்டாகும் |
காலணி தானம் | பெரியோர்களை அவமதித்த பாவம் போக்கும் |
மாங்கல்ய சரடு தானம் | மாங்கல்ய பலம் உண்டாகும், மாங்கல்ய தோஷம் நீங்கும், திருமணத் தடைகள் நீங்கும் |
பொன் மாங்கல்ய தானம் | திருமண தடைகள் நீங்கும் |
மஞ்சள் தானம் | சுபிட்சம் உண்டாகும் |
எள் தானம் | சாந்தி உண்டாகும் |
வெல்ல தானம் | வம்ச விருத்தி உண்டாகும் |
தண்ணீர் தானம் | மன மகிழ்ச்சி உண்டாகும் |
சந்தன தானம் | புகழ் மற்றும் கீர்த்தி உண்டாகும் |
புத்தகம் தானம் | கல்வி ஞானம் உண்டாகும் |
உங்கள் ராசிப்படி நீங்கள் செய்ய வேண்டிய தானங்கள்..
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |