தனம் தரும் கல்வி தரும் அந்தாதி பாடல்..! | Dhanam Tharum Kalvi Tharum Lyrics in Tamil

Advertisement

Dhanam Tharum Kalvi Tharum Lyrics in Tamil

பொதுவாக நமக்கு ஏதேனும் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அல்லது எந்தவொரு நல்ல காரியத்தை செய்ய தொடங்கும் முன்பும் கடவுளை வழிபடுவது வழக்கம். நம் ஒவ்வொருவருக்கும்ஒரு இஷ்ட தெய்வம் என்று ஒன்று இருக்கும். எனவே, அதனை நினைத்து எந்தவொரு செயலையும் செய்ய தொடங்குவோம். அந்த வகையில் எந்தவொரு செயல் செய்வதற்கு முன்பாக அபிராமி அந்தாதியில் வரக்கூடிய பாடலை அன்னை அபிராமியை நினைத்து பாடுவதன் மூலம் நாம் செய்ய்யும் விஷயங்கள் அனைத்தும் மங்களம் உண்டாகும்.

அபிராமி அந்தாதி என்பது தமிழ்நாடு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோவிலில் வசித்த அபிராமி தெய்வத்தினை போற்றி பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை 18 ஆம் நூற்றாண்டில் அபிராமி பட்டர் இயற்றியுள்ளார். எனவே, இந்த அபிராமி அந்தாதியில் இடம்பெற்றுள்ள பாடல்களில் சகல சௌபாக்கியங்களும் அடைய உச்சரிக்கக்கூடிய தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா பாடலையும் அதற்கான விளக்கத்தையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Abirami Anthathi Dhanam Tharum Kalvi Tharum Lyrics in Tamil:

Abirami Anthathi Dhanam Tharum Kalvi Tharum Lyrics in Tamil

சகல சௌபாக்கியங்களும் அடைய:

தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா

மனந்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா

இனந்தரும் நல்லன எல்லாந்தரும் அன்பர் என்பவர்க்கே

கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்தஸாதகே|

சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே ||

பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்…

பாடல் விளக்கம்:

எல்லா மங்களங்களுக்கும் மங்களமாகத் திகழ்பவளே, சிவபெருமானின் நாயகியே, பக்தர்களின் எல்லா ஆசைகளையும் (இச்சைகள்) பூர்த்தி செய்யக்கூடியவளே, எல்லோருக்கும் புகலிடமாக இருப்பவளே, மூன்று கண்களை உடையவளே, குறைவில்லாத மேனி நிறமுடையவளே, தேவி உன்னை வணங்குகிறேன்.

dhanam tharum kalvi tharum lyrics in tamil pdf

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பாடல் வரிகள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement