தனுசு ராசிக்காரர்களுக்கு 2024 எப்படி இருக்கும்.?

Advertisement

Dhanusu Rasi 2024 in Tamil

பொதுவாக, ஆன்மீகத்தில் 12 ராசிகளுக்கும் 27 ராட்சத்திரங்களும் உள்ளது. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் என மொத்தம் 12 ராசிகள் உள்ளது. அடுத்ததாக, இந்த ராசிகளுக்கு ஏற்ற 27 நட்சத்திரங்கள் உள்ளது. அசுவினி, மகம், மூலம், பரணி, பூரம், பூராடம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், உரோகிணி, அத்தம், திருவோணம், மிருகசீரிடம், சித்திர, அவிட்டம், திருவாதிரை, சுவாதி, சதயம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுடம், உத்திரட்டாதி என மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. ஜோதிடத்தின்படி, நவகிரங்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராசியில் பெயர்ச்சி அடைந்து இருக்கும். இந்த கிரகங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே ஒவ்வொரு ராசிக்கான ராசிபலங்களும் கூறப்படுகிறது.

எனவே, அந்த வகையில் தற்போது 2024 ஆம் ஆண்டு பிறக்க உள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியும் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக பலன்களை அளிக்குமா.? இல்லை அசுப பலன்களை அளிக்குமா.? என்பதை இப்பதில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

தனுசு ராசி பலன்கள் 2024:

 தனுசு ராசி 2024

12 ராசிகளில் ஒன்பதாவது ராசியாகவும், நெருப்பு ராசியாகவும் திகழும் தனுசு ராசி குருவாள் ஆளப்படும் ராசி ஆகும். குருவானவர் தெய்வ அம்சம் உள்ளவராகக் கருதப்படுகிறார். இந்த ராசி ஆனது, பாதி மனிதன் வில், அம்புடன் பாதி குதிரை மேல் இருப்பது போன்ற உருவத்தைக் கொண்டிருக்கும். மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரங்கள் ஆகும்.

நிதிநிலமை:

நிதிநிலைமை மற்றும் பொருளாதார நிலையை பொறுத்தவரை, 2024 ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்க்கு வளர்ச்சி அடையக்கூடிய வருடமாகவே இருக்கிறது. இந்த ஆண்டு பல வழிகளில் வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த தடைகள் நீங்கி சொத்து உங்கள் கைக்கு வந்து சேரும்.

கன்னி ராசி 2024 எப்படி இருக்கும்

வேலை மற்றும் தொழில்:

வேலை மற்றும் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு திருப்திகரமான பணவரவு இருந்தாலும், வேலை அல்லது தொழிலில் சில ஏற்ற தாழ்வுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் வேலை மாற்றம் கிடைக்க தாமதம் ஆகலாம். பத்தாம் வீட்டில் கேது இருப்பதால், பல சோதனைகளை கடந்து உங்களுக்கானது உங்களை வந்து சேரும்.

தனுசு ராசிக்காரர்களில் மருத்துவம், ஜோதிடர், ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல வளர்ச்சி இருக்கும்.

காதல் மற்றும் திருமணம்:

திருமண வயதில் இருக்கும் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மே மாதம் வரை திருமண யோகம் இருக்கிறது. மேலும், கலப்பு திருமணம் செய்ய இருப்பவர்களுக்கு மே மதத்திற்கு பிறகு திருமணம் வாய்ப்பு கைகூடும்.

தனுசு ராசி இந்த ஆண்டு எப்படி இருக்க வேண்டும்.?

இந்த  ஆண்டு தனுசு ராசிக்காரர்கள், வேலை மற்றும் தொழிலில் அவசரப்படாமல் இருக்க வேண்டும். எதையும் நன்கு யோசித்து குடும்ப பெரியவர்களிடம் கலந்தோசித்து முடிவு எடுக்க வேண்டும். புதன் வக்கிரமடைவதால் குடும்ப, தொழில் மற்றும் வேலை ஆகியற்றில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறுமையாக இருப்பது அவசியம். மேலும், புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

தனுசு ராசி 2024 பரிகாரம்:

  • வியாழன் கிழமை அன்று விரதம் எடுக்க வேண்டும்.
  • கால்நடைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
  • புதன் கிழமை தவறாமல் பெருமாள் வழிபாடு செய்ய வேண்டும்.
  • மஞ்சள் நிற பொருட்களை தானம் அளிக்க வேண்டும்.

திருமணத்திற்கு திருவெம்பாவை பாடுவதால் கிடைக்கும் பலன்கள் தெரியுமா

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement