நோய் தீர்க்கும் தன்வந்திரி மந்திரம்

Advertisement

தன்வந்திரி மந்திரம் தமிழில்

பொதுவாக உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது மன ரீதியாக ஏதாவது பிரச்சனை இருந்தாலோ மருத்துவமனைக்கு செல்பவர்களை விட அதிகமாக கோவிலுக்கு செல்பவர்களே அதிகம். ஏனென்றால் ஆன்மீக நம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் இதுபோன்ற செயல்களையே அதிகம் செய்கிறார்கள். ஏனென்றால் கடவுளிடம் சென்று நம்முடைய குறைகளை கூறினால் நமக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு செயலுக்கும், ஏன் நோய், பயம் என இவற்றை எல்லாம் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆன்மீகத்தில் எண்ணற்ற பரிகாரங்களும், மந்திரங்களும் மேற்கொள்கிறார்கள். மேலும் இதனை தொடர்ந்து செய்யும் போது அவர்களுக்கான பலன்கள் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இந்த பதிவில் தன்வந்திரி மந்திரம் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

Dhanvantari mantra in Tamil

ஓம் நமோ பகவதே
வாசுதேவயா தன்வந்த்ரயே
அமிர்தகலாஷா ஹஸ்தியா
சர்வாமய வினஷானயா
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணுவே நமஹ

அர்த்தம்:

எல்லோருக்கும் வரம் தருபவரும் வாசுதேவராக இருப்பவரும், அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருப்பவரும், சகல நோய்களை தீர்க்க மூவுலகத்தை காண்பவரும், மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்திரி கடவுளே உன்னை வணங்குகிறேன். எனக்கு வந்திருக்கும் நோய்களை கண்ணுக்கு தெரியாமல் நீக்குவாயாக என்பது தான் அர்த்தமாக இருக்கிறது.

தன்வந்திரி ஸ்லோகம் வரிகள்

நன்மைகள்:

தன்வந்திரி மந்திரத்தை காலை மற்றும் மாலை நேரத்தில் உச்சிரிக்க வேண்டும். இதனை உச்சரிக்கும் போது மனதார நினைத்து மந்திரத்தை கூற வேண்டும்.

இப்படி தொடர்ந்து கூறும் போது உங்களின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நீங்கள் ஏதும் நோயில் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் அந்த நோயிலிருந்து விடுபடலாம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement