வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

துக்க நிவாரண அஷ்டகம் | Dhukka Nivarana Ashtakam Lyrics in Tamil

Updated On: November 8, 2023 5:56 AM
Follow Us:
Dhukka Nivarana Ashtakam Lyrics in Tamil
---Advertisement---
Advertisement

துக்க நிவாரண அஷ்டகம்

பலரது வீட்டில் ஆன்மிக பாடல்களை கேட்கும் பழக்கம் இருக்கிறது, அது போல காலை மற்றும் மாலை நேரத்தில் பூஜை செய்வார்கள். பூஜை செய்யும் போது கடவுளுக்கு தீபாரதனை போன்றவை காட்டுவார்கள். அதோடு கடவுளுக்கு உரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் போன்றவற்றை கூறுவதாலும் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. பாடலை மனப்பாடமாக தெரிந்தவர்கள் பாடி விடுவார்கள். அதுவே தெரியாதவர்கள் புத்தகம் அல்லது மொபைலை பார்த்து தான் பாடுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் மூக பஞ்ச சதீ பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம்.

துக்க நிவாரண அஷ்டகம்:

மங்கள ரூபிணி மதி அணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் களிமுகம் கொண்டநல் கற்பகக் காமினியே
ஜெயஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

கான் உறுமலர் எனக் கதிர் ஒளிகாட்டிக் காத்திட வந்திடுவாள்
தான் உறு தவஒளி தார்ஒளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்
மான் ஊறு லிழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில்வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

தணதண தந்தண தவில் ஒலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணம்மிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமர் அது செய்தநல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுபாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெயஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெயஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

ஸ்ரீ லலிதா த்ரிசதீ பாடல் வரிகள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now