கடவுளை நீங்கள் எப்படி வணங்குவீர்கள்.? அதற்கான அர்த்தங்களை தெரிந்து கொள்ளுங்கள்

Advertisement

கடவுளை வணங்குவதன் அர்த்தங்கள்

ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். இன்றைய ஆன்மீக பதிவில் கடவுளை வணங்கும் முறையின் அர்த்தங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, கடவுளை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் உள்ளது. அவற்றின் நீங்கள் எப்படி கடவுளை வாங்குவீர்கள்.? என்பதையும் அப்படி வணங்கினால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கடவுளை வணங்கும்போது, சிலர் கைகளை தலைக்கு மேலே தூக்கி வணங்குவார்கள், ஒரு சிலர் முகத்திற்கு அருகில் வைத்து வணங்குவார்கள், இன்னும் ஒரு சிலர் நெஞ்சிற்கு அருகில் கைகளை வைத்து வணங்குவார்கள். இப்படி பல்வேறு முறைகளில் கடவுளை வழிப்பட்டு வருகிறோம். இவ்வாறு நாம் கடவுளை வணங்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அர்த்தங்களை எடுத்துரைக்கிறது. அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

விநாயகரை வழிபடும் முறை

Meanings of worshiping God:

தலைக்கு மேல்:

இரு கைகளை தலைக்கு மேல் தூக்கி வணங்கினால், உன்னை விட்டால் எனக்கு யாரும் இல்லை என்றும், நீ மட்டுமே எனக்கு துணை என்று இறைவனை சரண் அடைவதன் வெளிப்பாடு ஆகும்.

முகத்திற்கு அருகில்:

 different ways of worshipping god in tamil

இரு கைகளையும் முகத்திற்கு அருகில் வைத்து தலை குனிந்தது வணங்குவது அடக்கத்தின் வெளிப்பாடு ஆகும். உனக்கு கீழ் தான் எல்லோருக்கும் இருக்கிறோம் என்றும், இந்த உலகம் உனக்கு கீழ் தான் இயங்குகிறது என்று கூறி வணங்குவதின் பொருளாகும்.

நெஞ்சிற்கு நேராக:

 different ways of worshipping god and their meaning

நெஞ்சிற்கு நேராக, இரு கைகளையும் வைத்து வணங்கினால், இறைவா உன்னை என் நெஞ்சிற்குள்ளேயே வைத்திருக்கிறேன், எப்பொழுதும் என்னுடனே இருந்து என்னை வழிநடத்தி காப்பாய் என்ற எண்ணத்தை குறிக்கிறது.

மேலும் சில ஆன்மீக குறிப்புகள்:

  • அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.
  • கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் உடனே கழித்து கை மற்றும் கால்களை கழுவ கூடாது. சிறிது நேரம் கழித்து தான் கழுவ வேண்டும்.
  • பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.
  • செவ்வாய் கிழமை, புதன் கிழமை, வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கைத் துலக்கி கழுவக் கூடாது.
  • பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

திருநள்ளாறு கோவில் வழிபடும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement