வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கந்த சஷ்டி விரதம் 7 நாட்களும் செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும்.!

Updated On: October 24, 2024 4:07 PM
Follow Us:
Do and Don'ts in Kandha Sashti Viratham Tamil
---Advertisement---
Advertisement

Do and Don’ts in Kandha Sashti Viratham Tamil | கந்த சஷ்டி விரத நாளில் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.?

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில், கந்த சஷ்டி விரத நாளில் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை போர் செய்து வதம் செய்த நாட்கள் தான் கந்த சஷ்டி 7 நாட்கள் ஆகும். எனவே முருகனின் வெற்றி விழாவாக கொண்டாடப்படுவது தான் கந்தசஷ்டி விரதம். கந்த சஷ்டி விரதத்தின் நிறைவாக வருவது தான் சூரசம்ஹாரம்.

கந்த சஷ்டி விரதம் இருந்தால், தீராத கஷ்டமும் தீரும். அதிலும், குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் கந்த சஷ்டி நாளில் விரதம் இருந்தால், குழந்தை வரம் கிட்டும். அதனால் தான் “சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று கூறுவார்கள். சஷ்டி திதியில் முருகனுக்கு விரதம் இருந்தால் , அகப்பை என்று சொல்லக்கூடிய கருப்பையில் குழந்தை வரும் என்பதே இதன் பொருள். இதனால், பலரும் கந்த சஷ்டி விரதம் இருப்பார்கள். அப்படி விரதம் இருப்பவர்கள் அனைவரும் அந்நாளில் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.? என்பதையும் இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளுங்கள்.

கந்த சஷ்டி விரத நாளில் செய்ய வேண்டியவை:

  • கந்த சஷ்டி விரதம் 7 நாட்களும், எளிமையான சைவ உணவிகளை குறைந்த அளவில் உட்கொண்டு, முருகனையே நினைத்து கொண்டு இருக்க வேண்டும்.
  • குளிர்ந்த நீரில் இரண்டு வேளையும் குளிக்க வேண்டும்.
  • தினமும் காலை மாலை என இரு வேளையும் முருகன் படத்திற்கு பூ, பொட்டு வைத்து, விளக்கேற்றி கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.
  • ஓம் சரவண பவ மந்திரத்தை காலையில் 108 முறையும் மாலையில் 108 முறையும் உச்சரிக்க வேண்டும்.
  • கந்த சஷ்டி பாடலை உங்களால் எத்தனை முறை கேட்க முடியுமோ அல்லது படிக்க முடியுமோ அதனை கேட்கலாம் படிக்கலாம்.
  • காலை மாலை என இரு வேளையும் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட வேண்டும்.
  • விரதம் இருப்பவர்கள், வழக்கமான நாட்களை விட விரதம் இருக்கும் நாட்களில் அதிக நீரை அருந்த வேண்டும்.
  •   கந்த சஷ்டி விரத 7 நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், கந்தசஷ்டி திதி அன்று மட்டுமாவது விரதம் இருக்க வேண்டும்.

கந்த சஷ்டி விரதம் எத்தனை நாள் இருக்க வேண்டும்.? எப்படி இருக்க வேண்டும்.?

கந்த சஷ்டி விரத நாளில் செய்ய கூடாதவை:

  • கந்த சஷ்டி விரத இருக்கும் நாளில், அசைவ உணவுகளை உட்கொள்ளுதல் கூடாது.
  • தூங்கும்போது, தரையில் பாய் விரித்து தூங்குதல் கூடாது. அதற்க்கு பதிலாக கம்பளம் விரித்து தான் தூங்க வேண்டும்.
  • யாரிடமும் கோபமாக பேசவும் நடந்து கொள்ளவும் கூடாது.
  • கந்த சஷ்டி விரத நாளில் யாரையும் திட்ட கூடாது.
  • தீய எண்ணங்கள் மற்றும் தீய செயல்களை மனதில் நினைக்கக்கூடாது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now