புரட்டாசி மாதம் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.?

Advertisement

Do and Don’ts in Purattasi Month in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் புரட்டாசி மாதம் செய்ய வேண்டியவை பற்றியும் செய்ய கூடாதவை பற்றியும் பின்வருமாறு விவரித்துள்ளோம். புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. முன்னோர்களின் ஆசியை பெற்று தரும் மிக சக்தி வாய்ந்த மாதமாகும். புரட்டாசி மாதத்தில் புதனையும், அவரின் அதிபதியான வழிபடுவதால் சனி, ராகு கேது கிரகங்களினால் ஏற்படும் தோஷம் நீங்கும். இப்படி புரட்டாசி மாதத்தில் வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்பதால் இம்மாதம் ஆன்மீக மாதமாக கருதப்படுகிறது.

புரட்டாசி மாதம், சூரியன் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யக்கூடிய காலமாகும். சூரியன் தென் திசையை நோக்கி தனது பயணத்தை தொடங்கக்கூடிய காலம் ஆகும். இத்தகைய அற்புதமான மாதத்தில் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.? என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் பின்வருமாறு Do and Don’ts in Purattasi Month in Tamil பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம்.

புரட்டாசி மாதம் குழந்தை பிறந்தால் நல்லதா? இல்லை கெட்டதா?

புரட்டாசி மாதம் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.?

புரட்டாசி மாதத்தில் செய்ய வேண்டியவை:

  • புரட்டாசி மாதத்தில், புதன் ஆளக்கூடிய கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். புதனின் நட்பு கிரகம் சனிபகவான். எனவே, புரட்டாசி மாத சனிக்கிழமை தோறும், பெருமாளை வழிபடுவதால் சனி தோஷம் நீங்கி நன்மை அடையலாம்.
  • புதன் பகவான் சகல கலைகளிலும் வல்லவர். எனவே, இம்மாதத்தில் புதன் பகவானை வழிபடுவதால் அறிவு பெருகும்.
  • இம்மாதத்தில் நவராத்திரி பூஜை மேற்கொள்ளலாம்.
  • புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசைக்கு மகாளய அமாவாசை என்று பெயர். அந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும்.

புரட்டாசில மட்டன் குழம்பு செய்ய முடியலையா.. அப்போ இந்த குழம்ப செஞ்சு பாருங்க.. மட்டன் குழம்பயே மிஞ்சிடும்..

புரட்டாசி மாதத்தில் செய்ய கூடாதவை:

  • புரட்டாசி மாதத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் செய்ய கூடாது. ஆனால், 60 ஆம் கல்யாணம், காதுகுத்து, வளைகாப்பு போன்றவை செய்யலாம்.
  • இந்த மாதத்தில் வாஸ்து நாட்கள் எதுவும் இல்லை என்பதால், புதிதாக வீடு கட்டுதல் , கிரகப்பிரவேசம் செய்தல்,  புதுமனை புகுவிழா செய்தல், வாடகைக்கு வீடு குடிபுகுதல் போன்ற சுப காரியங்கள் செய்யப்படுவதில்லை.
  • இம்மாத்தில் வாடகை வீடு மாறுவதும் கூடாது. ஆனால், நிலம் மனை வாங்கி பத்திர பதிவு செய்யலாம்.
  • புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement