வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆயுத பூஜை அன்று என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.?

Updated On: September 23, 2025 4:17 PM
Follow Us:
Do and Don'ts on Ayudha Puja in Tamil
---Advertisement---
Advertisement

Do and Don’ts on Ayudha Puja in Tamil

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆயுத பூஜை அன்று என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்றாலே, நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது நாம் பயன்படுத்தும் ஆயுதங்களும், தொழில் செய்யும் இடங்களில் உள்ள பொருட்களுக்கும், கல்வியை கொடுக்கும் புத்தகத்திற்குள் பூ பொட்டு வைத்து வழிபாடு செய்வது தான். இந்த ஆண்டு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆனது அக்டோபர் 11 ஆம் தேதியன்று வருகிறது.

எனவே, ஆயுத பூஜை தினத்தில் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்யக்கூடாது என்பதை நாம் அனைவருமே அறிந்துகொள்ள வேண்டும். ஆயுத பூஜை நாளில் சில விஷயங்களை செய்வது அபசகுனமாக கருதப்படுகிறது. ஆயுத பூஜை நாளில் நம் தொழிலுக்கும் படிப்பிற்கும் பயன்படும் பொருட்களை சரஸ்வதி படத்திற்கு முன்னால் வைத்து வழிபாடு செய்வார்கள்.

வாழ்க்கையில் யோகம் பெறுவதற்கு சரஸ்வதி பூஜையை இப்படி செய்து வழிபடுங்கள்

ஆயுத பூஜை அன்று செய்ய வேண்டியவை:

  • ஆயுத பூஜைக்கு முதல் நாள் அன்று, வீட்டையும் பூஜை அறையும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
  • ஆயுத பூஜை, பார்வதி தேவிக்கும், லக்‌ஷ்மி தேவிக்கும் உகந்த நாள் ஆகும். எனவே, பூஜை அறையில் உள்ள பார்வதி தேவி மற்றும் லட்சுமி தேவி படத்தினை சுத்தம் செய்து பூ, பொட்டு வைக்க வேண்டும்.
  • ஆயுத பூஜை அன்று, நம் உழைப்பிற்கும், வருமானத்திற்கும் மற்றும் படிப்பதற்கும் பயன்படும் பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்து, மஞ்சள், குங்குமம்,பூ தீப ஆராதனை காட்ட வேண்டும்.

ஆயுத பூஜை அன்று செய்ய வேண்டியவை

  • அவல், பொரி, சுண்டல், பழம், சர்க்கரை பொங்கல், புளியோதரை போன்றவற்றை படைத்து சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு ஸ்லோகம்/பாடல்களை உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும்.
  • அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவில்களுக்கு சென்று துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
  • வீட்டில் இருக்கும் அரிவாள், கத்தி, ஸ்பேனர், வாகனங்கள் இயந்திரங்கள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை வைத்து வழிபட வேண்டும்.
  • மஞ்சள், குங்குமம் ,பாக்கு, வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய் மற்றும் பூசணிக்காய் போன்றவற்றை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
  • பூஜை செய்த பிறகு நைவேத்தியம் செய்த பொறி, கொண்டைக்கடலை மற்றும் பிரசாதம் போன்றவற்றை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.

ஆயுத பூஜை அன்று செய்ய கூடாதவை:

  • ஆயுத பூஜை நாளில், தீய சொற்களை பேசக்கூடாது. அசுத்தமான செயல்களையும் பாவங்களையும் செய்ய கூடாது.
  • இந்நாளில், அசைவ உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.
  • மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை செய்யக்கூடாது.
  • பிறரிடம் கோபமாக பேசக்கூடாது.
  • சோம்பேரி தனமாக இருக்க கூடாது.
  • மற்றவர்களின் தொழிலை பற்றி இழிவாக பேச கூடாது.
  • நம் தொழிலுக்கு பயன்படும் கருவிகள்/பொருட்களை அவமதித்தல் கூடாது. அதாவது, பொருட்களை தூக்கி எரிதல், உதைத்தல் போன்ற செயல்களை செய்தல் கூடாது.
  • பூஜையின் போது நீங்கள் பயன்படுத்தும் கருவிகளை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • இந்த நாள் கருவிகளுக்கு நீங்கள் செய்யும் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் நாளாக இருப்பதால் முக்கிய முடிவுகள் மற்றும் புதிய விஷயங்கள் தொடங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • இந்த புனிதமான நாளில் சண்டை போடுவது மற்றும் சத்தம் போடுவதை தவிர்க்க வேண்டும்.

ஆயுத பூஜைக்கு தேவைப்படும் பொருட்களின் பட்டியல்.!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now