Do and Don’ts on Ganesh Chaturthi in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். விநாயகர் சதுர்த்தி ஆனது, விநாயக பெருமானின் பிறப்பினை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படும் விழா ஆகும். இந்நாளில் விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, கொழுக்கட்டை, கொண்டக்கடலை போன்றவற்றை நெய்வேத்யமாக படைத்து வழிபடுவார்கள்.
விநாயகர் சதுர்த்தி ஆனது, ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 2024 ஆனது, செப்டம்பர் மாதம் 07 ஆம் அன்று வருகிறது. தமிழ் தேதிக்கு ஆவணி 22 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது என்பதை இப்பதிவின் வாயிலக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
விநாயகர் சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை:
- விநாயகர் சதுர்த்தி அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு பூஜை அறையில் உள்ள விநாயக பெருமானை போ, பொட்டு,மாலை, கீரிடம் வைத்து அலங்கரித்து வழிபாடு செய்ய வேண்டும்.
- கடையில் வாங்கி வந்த விநாயகர் சிலையோ அல்லது வீட்டில் உள்ள விநாயகர் சிலையோ எதுவாக இருந்தாலும், முக்கியமாக தலையில் கீரிடம் வாங்கி அன்றைய தினம் விநாயகருக்கு வைக்க வேண்டும்.
- விநாயகர் பெருமானுக்கு உகந்த பாடல்கள் அல்லது மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
- விநாயகர் பெருமானுக்கு பிடித்த உணவுகளான சுண்டல், கொழுக்கட்டை போன்ற உணவு பொருட்களை நெய்வேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
- முக்கியமாக விநாயகர் சதுர்த்தி அன்று விநாயக பெருமானுக்கு அருங்கம்புல் மாலை அணிவித்து வழிபட வேண்டும்.
- விநாயகர் சிலையை வீட்டில் கிழக்கு, மேற்கு அல்லது வடகிழக்கு திசையில் வைத்து வழிபட வேண்டும்.
- விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்த பிறகு, 3, 5 அல்லது 7 என்ற நாட்களின் அடிப்படையில் சிலையை நீரில் கரைக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி அன்று, பிள்ளையார் சிலையை ஏன் நீரில் கரைக்கிறார்கள் தெரியுமா..?
விநாயகர் சதுர்த்தி அன்று செய்ய கூடாதவை:
- வீட்டில் விநாயக பெருமானை ஸ்தாபனம் செய்யும் போது விநாயகரின் துதிக்கை ஆனது வலதுபுறம் திரும்பியவாறு இருக்க கூடாது.
- விநாயகர் சிலையை தனியாக வைக்க கூடாது. சிவன், பார்வதி, முருகன் சிலையுடன் சேர்த்து தான் வைத்து வழிபட வேண்டும்.
- விநாயக பெருமானை ஸ்தாபனம் செய்த பிறகு வெங்காயம், பூண்டு உள்ளிட்ட தாஸ்மிக உணவுகளை உட்கொள்ளக் கூடாது.
- விநாயகர் சிலை வீட்டில் இருக்கும் எல்லா நாட்களிலும், வெறுமனே வைத்து இருக்க கூடாது. தினமும் ஒரு நெய்வேத்தியம் வைத்து பூஜை செய்து வழிபட வேண்டும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |