Do Not Buy These 3 Items From Others in Tamil
நண்பர்களே அனைவருக்கும் ஹாய்..! நம்முடைய வாழ்வில் நிறைய பொருட்கள் வாங்கி இருப்போம். அப்படி நாம் வாங்கும் பொருட்கள் அனைத்தும் சில நேரங்களில் நம்மிடம் இருப்பதில்லை. அப்போது நாம் என்ன செய்வோம் பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு செல்வோம். அங்கு சென்று பொருட்களை வாங்கிக் கொள்வோம்..! சிலர் பக்கத்து வீட்டில் அல்லது எதிர்வீட்டில் தான் நமக்கு தேவையான பொருட்களை கடனாக வாங்கிக்கொள்வது வழக்கம். ஆனால் ஒரு சில பொருட்களை நாம் மற்றவர்களிடம் இருந்து வாங்க கூடாது. மீறி வாங்கினால் கடன் பிரச்சனை அதிகரிக்கும். அதை பற்றி இங்கு பார்ப்போம்.
Do Not Buy These 3 Items From Others in Tamil:
மறந்தும் கூட மற்றவர்களிடமிருந்து இலவசமாகவும் தானமாகவும் இந்த பொருட்களை வாங்கி விடாதீர்கள்..! அப்படி அதை வாங்கினால் சனி தோஷம், கடன் அதிகரிக்கும் என பெரியவர்கள் சொல்வார்கள்..! அது என்ன பொருள் என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!
சர்க்கரை:
இந்த சர்க்கரையை தானமாகவும் இலவசமாகவும் வாங்க கூடாது. அப்படி வாங்கினால் சுக்கிர பகவானுக்கு கோவம் ஏற்படும். ஏனென்றால் சீனி வெண்ணிறமாக உள்ளது. வெண்மை என்பது சுக்கிர பகவானுக்கு பிடித்தது. அதனை நாம் எக்காரணத்தை கொண்டும் தானமாக வாங்குவதை தவிர்க்கவும். நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை அவர் கெடுத்து விடுவார் என்று சொல்லப்படுகிறது.
எண்ணெய்:
எண்ணெய் என்பதை சனி பகவான் ஆதிக்கம் பெற்ற பொருள். இந்த பொருளை யாரிடமாவது தானமாகவும் இலவசமாகவும் வாங்கி வந்தால் சனியின் தோஷம் அதிகமாகும். அதேபோல் சனி பகவான் கோவத்திற்கு ஆளாவீர்கள். சனி பெயர்ச்சி நடக்கும் போது அவர் உங்கள் மீது கோவத்தை அதிகமாக காட்டுவார்கள்..!
இரும்பு சார்ந்த பொருட்கள்:
முக்கியமாக இரும்பு சார்ந்த பொருட்களை யாரிடமும் தானமாக வாங்கி வர கூடாது அப்படி வாங்கி வந்தால் சனி பகவானின் மிக பெரிய கோவத்திற்கு ஆளாவீர்கள். கொஞ்ச நேரத்தில் இரும்பு பொருட்களை உபயோகப்படுத்திவிட்டு அதன் பின்பு இதனை திருப்பி கொடுத்தால் எந்த ஒரு தோஷமும் ஏற்படாது. ஆனால் உங்களுக்கு என்று தனியாக எடுத்து வந்தால் அது பெரிய தோஷமாகும்.
புத்திர தோஷம் என்றால் என்ன புத்திர தோஷம் நீங்க என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |