இந்த பொருட்களை வைத்திருந்தால் சனியின் பார்வை பட்டு பணக்கஷ்டம் ஏற்படுமாம்..

Advertisement

பாத்ரூமில் இருக்க கூடாத பொருட்கள்

பொதுவாக  வீடு கட்டும் போது எல்ல விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். வீடு கட்டுவதற்கும் அடிக்கல் வைப்பது முதல் நல்ல நாளா என்று பார்த்து தான் வைப்பார்கள். கிட்சனில் உள்ள பொருட்களை எல்லாம் வாஸ்து சாஸ்திரம் படி தான் வைப்பார்கள். எல்லாவற்றிற்கும் எப்படி வாஸ்து சாஸ்திரம் இருக்கிறதோ பாத்ரூமில் உள்ள பொருட்களுக்கும் வாஸ்து சாஸ்திரம் இருக்கிறது. அதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

குளியலறையில் வைக்க கூடாத பொருட்கள்:

ஈரமான துணிகள்:

குளியலறையில் வைக்க கூடாத பொருட்கள்

வீட்டின் பாத்ரூமில் ஈரமான துணிகள், அழுக்கு படிந்த துணிகள் இருக்க கூடாது, இதனால் வாஸ்து தோஷம் உண்டாகும். மேலும் சூரிய தோஷத்தையும் ஏற்படுத்தும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.

மேலும் ஈர துணிகள் சனி பகவானுக்கு உகந்ததாக கூறப்படுகிறது. இதனால் சனியின் பார்வை உங்கள் மீது படும். இதனால் உங்களின் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருக்கும்.

வாடிய செடிகள்:

பாத்ரூமில் உள்ள வாளி அல்லது டப்பில் தண்ணீர் இருப்பது போல பார்த்து கொள்ளவேண்டும். வாளியில் தண்ணீர் இல்லாமல் இருந்தால் வீட்டில் பணவரவு குறைவாக காணப்படும். மேலும் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.

கடன் பிரச்சனையிலிருந்து விடுபட கரும்பு சாறு மட்டும் போதுமா.!

சிலர் வீட்டில் பாத்ரூமில் செடிகள் வளர்க்கும் பழக்கம் இருக்கும். அந்த செடியை வாடிய நிலையில் இருந்தால் அதனை அப்புறப்படுத்தி விட வேண்டும். அப்படி ஒருவேளை நீங்கள் வாடிய செடி இருந்தால் பணக்கஷ்டம் ஏற்படும்.

உடைந்த கண்ணாடி:

குளியலறையில் வைக்க கூடாத பொருட்கள்

பாத்ரூமில் உடைந்த நிலையில் கண்ணாடி இருந்தால் அதனை நகர்த்தி விட வேண்டும். உடைந்த நிலையில் உள்ள காண்ணாடியை வைத்திருந்தால் வீட்டில் எதிர்மறையான நிலையை ஏற்படுத்தும்.

தண்ணீர் குழாய்:

பாத்ரூமில் உள்ள தண்ணீர் குழாயானது பழைய நிலையில் இருந்தால் அதனை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் உடைந்த நிலையில் தண்ணீர் குழாய் இருந்தாலும் அதனை அப்புறப்படுத்த வேண்டும்.

குழாயிலிருந்து தண்ணீர் சொட்டு சொட்டாக ஊற்றினால் அதை சரி செய்ய வேண்டும். இப்படி தண்ணீர் ஒழுகி கொண்டே இருந்தால் வீட்டில் எதிர்மறையான ஆற்றலை வெளிப்படுத்தும்.

மேல் கூறப்பட்டுள்ளது போல் உங்கள் வீட்டு பாத்ரூமில் இருந்தால் அதன் நீக்கி விட வேண்டும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement