பண பிரச்சனை தீர வேண்டுமா..? அப்போ மகா சிவராத்திரி அன்று இதை செய்யுங்க..!

Advertisement

Maha Shivaratri 2024

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம்மில் பலருக்கும் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை இருக்கிறது. அதிலும் சிவபெருமான் என்றால் மனமுருகும் பக்தர்கள் நிறையவே இருக்கிறார்கள். அப்படி சிவ பெருமானுக்கு மிக பெரிய விரதமாக இருப்பது சிவன் ராத்திரி தான். இந்த மகா சிவராத்திரியில் பலரும் விரதம் இருந்து தூங்காமல் சிவபெருமானிடம் வேண்டி பிராத்தனை செய்வார்கள்.

என்ன தான் சிவராத்திரி மாதம் மாதம் வந்தாலும், இந்த மஹா சிவராத்திரிக்கு தனி சிறப்புண்டு. அதேபோல இந்த ஆண்டும் அதாவது 2024 மார்ச் 8-ஆம் தேதி மஹா சிவராத்திரி வருகின்றது. சரி மஹா சிவராத்திரி அன்று எப்படி விரதம் இருக்க வேண்டும், மற்றும் அதன் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

மகா சிவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் விரதம் பலன்கள்..

பண பிரச்சனை தீர என்ன செய்ய வேண்டும்: 

பண பிரச்சனை தீர என்ன செய்ய வேண்டும்

பொதுவாக நம் அனைவருக்குமே கடன் பிரச்சனை என்பது கண்டிப்பாக இருக்கும். அந்த கடன் பிரச்சனையை நீங்கள் இந்த சிவராத்திரியில் சரி செய்யலாம்.

அதாவது மகா சிவராத்திரி நாளில் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளிப்பார். சிவன் பார்வதியை இந்த நாளில் தான் திருமணம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானை மகிழ்விக்க ஜோதிடத்தில் சில பரிகாரங்கள் உள்ளன. அதனை நாம் செய்தால், நமக்கு இருக்கும் கடன் பிரச்சனை தீர்ந்து செல்வவளம் கிடைக்கும். சரி வாருங்கள் அவை என்னவென்று காணலாம்.

உணவளிக்க வேண்டும்: 

மஹா சிவராத்திரி அன்று ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இப்படி ஏழை மக்களுக்கு உணவளிப்பதால் வீட்டில் இருக்கும் பணப் பற்றாக்குறையும், உணவுப் பற்றாக்குறையும் தீரும் என்று நம்பப்படுகிறது.

மகா சிவராத்திரி அன்று 10 ரூபாய் செலவு செய்து இந்த பொருட்களை வாங்குனீர்கள் என்றால் தீராத கடனும் தீர்ந்து விடும்

தீபம் ஏற்றி வழிபடவும்:

நாம் அனைவருமே மஹா சிவராத்திரி அன்று சிவன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது மாலை நேரத்தில் சிவன் கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் முன் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

இப்படி வழிபடுவதால் உங்கள் பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மேலும் வீட்டில் செல்வம் பெருகும்.

கருப்பு எள் அபிஷேகம்:

மஹா சிவராத்திரி நாளில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அதில் சிறிது கருப்பு எள்ளைக் கலந்து வைக்க வேண்டும். அந்த நீரை சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்யும் போது “ஓம் நம சிவாய” என்று சொல்லுங்கள்.

இப்படி செய்வதால் உங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகும். மேலும் மனதிற்கு அமைதி கிடைக்கும்.

பூக்கள் அலங்காரம்:

மஹா சிவராத்திரி தினத்தில் சிவலிங்கத்தை வில்வ மரத்தின் இலைகள் மற்றும் மல்லிகைப் பூக்களால் வழிபட்டால் அபரிமிதமான செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதுபோல சிவலிங்கத்தை பூக்களால் அலங்காரம் செய்து வணங்கினால் பணம் பெருகும். தொழிலில்  லாபம் கிடைக்கும்.

அது மட்டுமில்லாமல், சிவபெருமானை மகிழ்விக்க வழிபாட்டின் போது அவருக்கு விருப்பமான பொருட்களை வழங்குவதால் நற்பலன்கள் கிடைக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement