Coconut Breaking in Temple
பொதுவாக, வீடாக இருந்தாலும் சரி கோவிலாக இருந்தாலும் சரி தேங்காய் உடைத்து கடவுளை வழிபடுவது வழக்கம். அதேபோல், கோவிலில் தேங்காய் உடைத்து கடவுளை வழிபட்டு விட்டு கோவிலுக்கு வெளியில் அல்லது கடவுளுக்கு முன்னால் சிதறு தேங்காய் உடைத்து வழிப்படுவதும் வழக்கம். அப்படி வழிபடும்போது சிலர் தங்கள் வேண்டுதலை கூறி 108 தேங்காய் உடைக்கிறேன், 9 தேங்காய் உடைக்கிறேன் என அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கூறுவார்கள்.
அப்படி சிதறு தேங்காய் உடைப்பதற்கு ஒரு கணக்கு உள்ளது. அதாவது, ஒவ்வொரு வேண்டுதலுக்கு ஒவ்வொரு கணக்கில் தேங்காய் உடைக்க வேண்டும். ஆகையால், இப்பதிவின் வாயிலாக எந்த வேண்டுதலுக்கு எத்தனை தேங்காய் உடைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
எந்த வேண்டுதலுக்கு எத்தனை தேங்காய் உடைக்க வேண்டும்:
பொதுவாக, நாம் கோவிலுக்கு செல்லும்போது கடவுளுக்கு ஒரு சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு வேண்டுதலுக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கடன் நீங்க:
கடன் பிரச்சனை அனைத்திலிருந்து விடுபட 7 சிதறு தேங்காய் உடைத்து வழிபட வேண்டும்.
திருமணம்:
திருமணம் சம்மந்தப்பட்ட வேண்டுதலுக்கு 11 சிதறு தேங்காய் உடைத்து வழிபட வேண்டும்.
கோவிலில் ஏன் தேங்காய் உடைக்கிறார்கள் காரணம் தெரியுமா..?
கல்வியில் சிறந்து விளங்க:
ஒழுங்கான படிப்பு இல்லாதவர்களும், கல்வி அறிவு மேம்பட வேண்டும் என்று நினைப்பவர்களும் கடவுளுக்கு 5 சிதறு தேங்காய் உடைத்து வழிபட வேண்டும்.
தொழிலில் லாபம் பெற:
தொழில் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் தடைகள் நீங்கி தொழிலில் லாபம் பெருக கடவுளுக்கு 3 சிதறு தேங்காய் உடைத்து வழிபட வேண்டும்.
குழந்தை பாக்கியம் பெற:
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கடவுளுக்கு 9 சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிட்டும்.
உடல் ஆரோக்கியம் பெற:
நோய்நொடியில்லாத வாழ்க்கை வாழ 3 சிதறு தேங்காய் உடைத்து வழிபட வேண்டும்.
வேலை கிடைக்க:
நீண்ட காலமாக வேலை இல்லாதவர்கள் 3 சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவதன் மூலம் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
இவ்வாறு நீங்கள் உங்கள் வேண்டுதலுக்கு ஏற்றவாறு மாதம் மாதம் ஒருமுறை தேங்காய் உடைத்து வழிபட்டு வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அதன் பிறகு, வேண்டுதல் நிறைவேறியதும் தேங்காய் கலந்த இனிப்பு உணவு செய்து கோவிலில் படைத்து தானம் செய்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறலாம்.
நினைத்த காரியம் 10 நாட்களில் நிறைவேற ஒரு கைப்பிடி கல் உப்பு போதும்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |