Dog Bite in Dream is Good or Bad
தினமும் தூங்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கனவுகள். இதுமாதிரி நமக்கு வரும் கனவுகள் அனைத்திற்கும் பின்பும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பதாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் நிறைய நபர்களுக்கு நாய் தொடர்பான கனவுகள் அதிகமாக வரும். பெரும்பாலான வீடுகளில் நாய் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வருகிறது. என்ன தான் நாயினை நாம் ஆசையாக வளர்த்து வந்தாலும் கூட கனவில் துரத்துவது போல, கடிப்பது போல கனவுகள் வந்தால் கொஞ்சம் பயமாக தான் இருக்கும். இவற்றை எல்லாம் விட நமக்கு நாய் கடிப்பது போல கனவு வருகிறதே அது நல்லதா..! கெட்டதா..! அதற்கு என்ன பலனாக இருக்கும் என்று சிந்திக்க ஆரம்பித்து ஒவ்வொருவரிடமாக அதற்கான அர்த்தத்தினை கேட்போம். அந்த வகையில் இன்றைய ஆன்மீக பதிவில் கனவில் நாய் கடித்தால் நல்லதா..! கெட்டதா..! என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
நாய் துரவுத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா.. |
கனவில் நாய் கடித்தால் நல்லதா..! கெட்டதா..!:
நாம் அனைவரும் வீட்டில் நாய் குட்டியினை சின்னதில் இருந்து தூக்கி வளர்த்தாலும் கூட சில நேரத்தில் அது நம்மை கடித்து விடுகிறது. இதுபோல நாய் கடித்தால் உடனே நாம் மருத்துமனைக்கு சென்று அதற்கான சிகிச்சையினை எடுத்துக்கொள்வது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக உள்ளது.
அதுவே நாம் தூங்கும் போது சில நேரத்தில் நாய் நம்மை கடிப்பது போல, துரத்துவது போல மற்றும் நம்மை சுற்றி வருவது போல இதுமாதிரி கனவுகள் வரும்.
இதுபோன்ற கனவுகள் வரும் போது ஏன் திடீரென்று இப்படி வருகிறது அது நல்லதா இல்லை கெட்டதா என்று ஒரு கேள்வி நமக்குள் தோன்றும். மேலும் இத்தகைய கனவுக்கு என்ன தான் பலனாக இருக்கும் என்ற தெரியாமல் இருக்கும்.
ஆகையால் நாய் கனவில் கடித்தால் நல்லதா இல்லை கெட்டதா என்று கேட்டால் நல்லது தான் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. ஏனென்றால் கனவில் நாய் நம்மை கடிப்பதனால் நமக்கு வரப்போகும் பிரச்சனை மற்றும் இதுநாள் வரையிலும் உள்ள பிரச்சனை இருக்காது என்று சொல்லப்படுகிறது.மேலும் குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பது கனவில் நாய் கடிப்பதற்கான பலன் ஆகும். எனவே நாய் கனவில் கடித்தால் அதனை கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம் என்றும் அது நல்லது தான் என்றும் சொல்லப்படுகிறது.
எருமை கனவில் வந்தால் என்ன பலன்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |