உங்கள் ராசிப்படி நீங்கள் செய்ய வேண்டிய தானங்கள்..!

Advertisement

12 ராசிகளும் தானங்களும் 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளும் செய்ய வேண்டிய தானங்கள் என்ன என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறை என்பது அமைக்கப்பட்டிருக்கும். அதன்படி நாமும் வாழ்ந்து வருகிறோம். அப்படி நம் வாழ்க்கையில் ஏதேனும் கஷ்டங்கள் ஏற்பட்டால் நம் சில ஆன்மீக முறைகளை கடைபிடிக்க வேண்டும். அந்த வகையில் 12 ராசிகளும் கட்டாயம் தானம் செய்ய வேண்டும்.

தானம் செய்வது என்பது புண்ணிய கணக்கில் சேராது. ஒருவர் நம் கண் முன் கஷ்டப்படும்போது அவருக்கு தேவையான உதவி / தானம் செய்து அவரை காப்பாற்றுவது அவரின் கடமை. ஆகையால், நாம் அனைவருமே தானம் செய்ய வேண்டும். அதுபோல், ஒவ்வொரு ராசிகளுக்கு ஒவ்வொரு விதமான தானங்களை செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே, அதனை பற்றி இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க.

Donations To be Done by All 12 Zodiac Signs in Tamil:

12 ராசிக்களும் தானங்களும் 

மேஷ ராசி:

மேஷ ராசிக்காரர்கள் ஏழைகளுக்கு தங்களால் இயன்ற தானங்களை செய்ய வேண்டும். குலதெய்வ கோவில்களுக்கு சென்று தவறாமல் வழிபட வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். முக்கியமாக மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்ய வேண்டும்.

ரிஷப ராசி:

ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய் கிழமைகளில் சாம்பார் சாதம் செய்து தானமாக வழங்க வேண்டும். மேலும், ஏழை பெண்களின் திருமணத்திற்கு உங்களால் இயன்ற தானங்களை செய்து வரலாம்.

மிதுன ராசி:

மிதுன ராசிக்காரர்கள் புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து பிறருக்கு வெண் பொங்கலை தானமாக கொடுக்க வேண்டும். மேலும், மிதுன ராசிக்காரர்கள் பித்ரு வழிபாடு தவறாமல் செய்ய வேண்டும்.

கடக ராசி:

கடக ராசிக்காரர்கள் பசுமாட்டிற்கு உணவு தானம் செய்து வர வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி கொடுத்து தானம் செய்தல் வேண்டும்.

சிம்ம ராசி:

சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதத்தை தானமாக வழங்குதல் வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை வாங்கி தந்து உதவி செய்யுங்கள்.

கன்னி ராசி:

கன்னி ராசிக்காரர்கள் கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.  இவர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும்.

துலாம் ராசி:

துலாம் ராசிக்காரர்கள் விநாயக வழிபாடு செய்தல் வேண்டும். இவர்கள் ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல் தானம் செய்ய வேண்டும்.

விருச்சகம் ராசி:

விருச்சகம் ராசிக்காரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்து வர வேண்டும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி தர வேண்டும். கடன் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்து வரலாம்.

தனுசு ராசி:

தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். கொண்டைக்கடலை மாலை செய்து குருபகவானுக்கு அணிவிக்க வேண்டும். அதன் பிறகு, இதனை பக்தர்களுக்கு தானம் செய்யலாம். வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய் கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம்.

மகர ராசி:

மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வரலாம். வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளிக்க வேண்டும். கோவில்களில் வேலை செய்பவர்களுக்கு தானம் செய்யலாம்.

கும்ப ராசி:

கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவு செய்து தானமாக வழங்குதல் வேண்டும்.

மீன ராசி:

மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்ய வேண்டும். ஏழை மற்றும்  மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களால் இயன்ற பொருட்களை தானம் செய்ய வேண்டும். மேலும், நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம், அய்யப்ப பக்தர்களுக்கு உதவி செய்யலாம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement