இனி இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் வாழும் இந்த நவீன உலகில் என்ன மாறினாலும் ஆன்மிகம் மட்டும் மாறாத ஒன்றாக உள்ளது. இந்த காலத்திலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அதுபோல ஆன்மீகத்தில் அதிக பற்று கொண்டவர்கள் எதை செய்தாலும் ஜோதிட சாஸ்திரப்படி தான் செய்வார்கள். அதுபோல ஏதாவது பிரச்சனை வந்தாலும் அதை ஜோதிடப்படி தான் சரி செய்வார்கள். இதுபோல ஒவ்வொன்றுக்கும் பல காரணங்கள் கூறுவார்கள். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொன்றையும் பார்த்து தான் செய்வார்கள். சரி இது தான் நம் அனைவருக்குமே தெரியுமே..! நீங்கள் தூங்கும் போது தண்ணீரை பக்கத்தில் வைத்து தூங்குவீர்களா..? அப்போ இந்த பதிவை படித்து அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!
கார்த்திகை தீபம் வழிபடும் முறைகள் மற்றும் விளக்கேற்றும் திசைகள்
இனி தூங்கும் போது தண்ணீரை பக்கத்தில் வைத்து தூங்காதீர்கள்..?
பொதுவாக நம்மில் பலரும் இரவு நேரத்தில் தூங்கும் போது அடிக்கடி தாகம் எடுக்கும் என்பதற்காக தண்ணீரை தலையணைக்கு பக்கத்தில் வைத்து தூங்குவார்கள். ஆனால் இப்படி தலையணைக்கு பக்கத்தில் தண்ணீரை வைத்து தூங்கக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
காரணம் இரவை ஆட்சி செய்யும் சந்திரன், தண்ணீருக்கு காரகத்துவம் பெற்றவர். அதேபோல மனிதர்களின் மனதிற்கும் அவர் தான் காரகத்துவம் பெற்றவர். அப்படி இருக்கையில் நாம் தூங்கும் போது தண்ணீரை தலையணைக்கு அருகில் வைத்து தூங்கினால் தீராத கடன் பிரச்சனைகள் வரும் என்றும், தீராத சோதனைகள் ஏற்படும் என்றும் ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
கார்த்திகை தீபம் ஏற்ற சரியான நேரம் தெரியுமா
உடனே நீங்கள் அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் மட்டும் தண்ணீரை தலையணைக்கு அருகில் வைத்திருந்தார்களே என்று சொல்வீர்கள். உண்மை தான் ஆனால் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் செம்பு பாத்திரத்தில் தான் தண்ணீரை வைத்து அதையும் கைக்கு எட்டும் தூரத்தில் சற்று இடைவெளி விட்டு தான் தூங்குவார்கள்.
இப்படி செய்வதால் எந்த பிரச்சனையும் கிடையாது. அதனால் இனி இரவு நேரத்தில் தூங்கும் போது தண்ணீரை பக்கத்தில் வைத்து தூங்காதீர்கள்.
திருக்கார்த்திகை அன்று எத்தனை விளக்கு எந்த முறையில் ஏற்ற வேண்டும் தெரியுமா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |