இந்த 5 வார்த்தை பேசினால் கடன் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும்..!

Advertisement

Don’t Say These 5 Words in Tamil

தமிழ் என்பது இயற்கை மொழி என்று சொன்னால் அது மிகை ஆகாது. அப்படி இயற்கையிலிருந்து ஆதியிலிருந்து உருக்காகியுள்ளது என்றால், தமிழ் பேசும் வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது. பெரியவர்கள் சொல்லி இதை கேட்டிருப்போம். நாம் பேசுவதும் நினைப்பதும் மட்டுமே நமக்கு நிழலும் என்று சொல்வார்கள். மேலும் தீய வார்த்தைகளை பேசாதீர்கள் என்றும் சொல்வார்கள். இந்த பதிவின் வாயிலாக நாம் தினமும் பேசும் வார்த்தைகளில் இந்த 5 வார்த்தைகளை முற்றிலும் தவிர்த்தால் வீடே மகிழ்ச்சியாக இருக்கும்.

Don’t Say These 5 Words in Tamil:

நாம் பேசும் வார்த்தைகளுக்கு சக்தி இருப்பதால் தான் நம்முடைய முன்னோர்கள் சித்தர்கள், ஞானிகள் அனைவரும் நம்முடைய நன்மைகளுக்காக மந்திரங்களை உருவாக்கி தந்தார்கள்.

அதனை சொல்ல சொல்ல நம்முடன் நல்ல உணர்வுகள் ஏற்படும். மேலும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். அதேபோல் அவர்கள் தீய வார்த்தைகளை அதாவது மங்கள வார்த்தைக்கு எதிரான அமங்கல வார்த்தைகளை சொல்லாமல் இருப்பார்கள்.

ஆகவே வீட்டில் தொடர்ந்து அமங்கல வார்த்தைகளை உச்சரித்து வந்தால் அந்த வார்த்தையிலிருந்து வரக்கூடிய அதிர்வுகள் கட்டாயமாக அந்த நிலைமைக்கு தள்ளிவிடும் என்பதையும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

அப்படி என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் என்றால், குழந்தைகளை திட்டும்போது கூட நாயே, தரித்திரம் பிடித்தவனே என்று தான் சொல்கிறோம்.

இதனை அப்படியே சொல்லாமல் தவிர்த்து விடுங்கள். சிலர் சனி பகவானை இழுத்து திட்டுவார்கள். அவரை சொல்லி கூப்பிட்டால் யாரோ என்னை அழைக்கிறார்கள் என்று சொல்லி உங்களை அவர் தேடி வந்துவிடுவார். அவர் ஒரு நீதிமான். நாம் செய்யும் தவறுகளை நினைவுபடுத்தும் விதமாக நமக்கு பலன்களை அளிப்பார். ஆகவே பின் வரும் வார்த்தைகளை சொல்லாமல் தவிர்த்து விடுங்கள்.

சமையலறையில் இந்த பொருட்கள் இருந்தால் கஷ்டம் மேல் கஷ்டம் ஏற்படும்..!

 don't say like that

குழந்தைகளிடம் பேசும் போது மிகவும் கனிவாக பேசவேண்டும். படிக்காமல் இருந்தால் படி என்று சொல்லுங்கள். பக்கத்துவீட்டு பயனை பார் அவன் படிக்கிறார்கள் நீ படிக்காமல் இருக்கிறாய் என இதுபோன்ற வார்த்தைகளை சொல்லாதீர்கள்.

வீட்டில் இந்த பொருள் தீர்ந்துவிட்டது என்று சொல்லக்கூடாது. அதற்கு பதிலாக இந்த பொருள் வாங்க வேண்டும் என்று சொல்லலாம். ஏனென்றால், தீர்ந்துவிட்டது என்பது செலவு என்று பொருள். ஆகவே அதனை சொல்லக்கூடாது.

 don't say like that

அதேபோல் இருந்தது அனைத்தையும் கொடுத்துவிட்டேன் என்று சொல்லக்கூடாது. வீட்டில் ஒரு பொருளும் இல்லை நான் அனைத்தையும் இழந்துவிட்டேன் என்றும் சொல்லக்கூடாது.

அதேபோல் நான் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்கேன் என்றும்  சொல்லகூடாது. அப்புறம் தொடர்ந்து உங்கள் வாழ்க்கையில் எதுவும் இல்லாமல் போய்விடும்.

எனக்கு என்று எதுவும் இல்லை என்றும் சொல்லக்கூடாது. நாம் எங்கு செல்லவேண்டும் என்னிடம் எதுவும் இல்லை என்றும் சொல்லக்கூடாது. இல்லை என்ற வார்த்தைக்கு அவ்வளவு ஆற்றல் உள்ளது. ஆகவே அதையும் சொல்வதை தவிர்த்து விடுங்கள்.

ஆகவே உங்களால் முடியவில்லை என்றாலும், அது நடக்காது என்றாலும் நேர்மறை ஆற்றல் கொண்ட சொற்களை மட்டுமே உச்சரிப்பது நல்லது. ஏனென்றால் ஒருவருடைய வாய் போல் மற்றவர்கள் வாய் இருக்காது. சிலருக்கு சில வார்த்தைகள் சொல்லும் போது அப்படியே பழிக்கும்.

இதையும் படிக்கலாமே 👉👉👉 வீட்டை கூட்டி குப்பையை இந்த மூலையில் மட்டும் ஒதுக்கிடாதீங்க

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement