Do’s and Don’ts During Margazhi Month in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மார்கழி மாதத்தில் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். மற்ற மாதங்களை விட மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக இருக்கிறது. மார்கழி மாதம் என்றாலே நம் அனைவரின் நினைவிற்கு வருவது அதிகாலை குளிரும், கோவில்களில் கேட்கும் பக்தி பாடல்களும் மற்றும் அதிகாலையில் எழுந்து வாசலில் கோலம் இடுவதும் தான்.
இவை அனைத்தையும் தாண்டி, மார்கழி மாதம் என்றாலே அதுவே தெய்வீக வழிபாட்டிற்கு உகந்த மாதம். அப்படி இருக்கும் பட்சத்தில் நம் முன்னோர்கள் இந்த மாதத்தில் சில செயல்களை கட்டாயம் செய்ய வேண்டும் என்று கூறியும், சில விஷயங்களை மறந்தும் கூட செய்தல் கூடாது என்றும் சொல்லி சென்றுள்ளார்கள். எனவே, நாமும் அதனை பின்பற்றி நடக்க வேண்டும் அல்லவா.? அதனால், மார்கழி மாதத்தில் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.? என்பது பற்றியும் இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
மார்கழி மாதம் செய்ய வேண்டியவை:
- மார்கழி மாதத்தில் காலையிலேயே எழுந்து விட வேண்டும். மற்ற மாதங்களை விட மார்கழி மாதத்தில் ஆக்சிஜன் நிறைந்திருக்கும்.
- இந்த மாதத்தில் காலையில் எழுந்து, வீட்டை சுத்தம் செய்து விட்டு, குளித்து, கோலமிட்டு, திருப்பாவை, திருவெண்பாவை பாடல்களைப் பாட வேண்டும்.
- ஆண்டாள், பெருமாள் படம் வைத்து பூஜை செய்து காலையும், மாலையும் வழிபட வேண்டும்.
- அதிகாலையில் எழுந்து பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டால் மஹாலக்ஷ்மியின் அருள் கிடைக்கும்.
- பெண்கள் அனைவரும் அதிகாலையிலே எழுந்து வாசலில் அரிசி மாவினால் வண்ண வண்ண கோலங்கள் போட்டு பசு சாணம் வைத்து அதன் மேல் பூசணி பூ வைக்க வேண்டும்.
- மார்கழி மாதம் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபாடு செய்து வந்தால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.
- மார்கழியில் திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்யாவிட்டாலும், திருமணத்திற்கான வரன் பார்த்தல், ஜாதகம் பரிமாற்றம், கர்ப்பிணிப் பெண்களுக்கு சீமந்தம் செய்தல் போன்றவற்றை செய்யலாம்.
- வீடு, மனை, நிலம் போன்ற புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு முன் பணம் கொடுக்கலாம்.
மார்கழி மாதத்தில் மட்டும் வாசலில் ஏன் பூசணி பூ வைக்கிறார்கள் தெரியுமா.?
மார்கழி மாதம் செய்ய கூடாதவை:
- மார்கழி மாதத்தில் திருமணம் செய்தலும் விதை விதைத்திலும் கூடாது. ஏனெனில் பனிக்காலங்களில் விதைகள் சரியாக முளைக்காது.
- மார்கழி மாதத்தில் விரதம் மேற்கொள்ளும் பெண்கள், உணவுகளில் நெய், பால் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள கூடாது.
- இந்த மாதத்தில் அதிகாலையில் ஆக்ஜிஜன் அதிகமாக நிறைந்திருக்கும் என்பதால் அதிகாலையிலே சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்திருக்க வேண்டும். சூரிய உதித்த பிறகு எழுந்திருக்க கூடாது.
- இம்மாதத்தில் புதுமனையில் குடிபுகுதல், வாடகை வீடு மற்றும் ஒத்திகை வீடு மாறுதல் கூடாது.
- மார்கழி மாதத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், காது குத்துதல், புதிய வீட்டிற்கான பத்திரப் பதிவு செய்தல் போன்றவற்றை செய்தல் கூடாது.
- மேலும், வாகனம் வாங்குதல் மற்றும் வாகனம் பதிவு செய்தலும் கூடாது.
- மார்கழி மாதத்தில் அசைவம் சாப்பிட கூடாது.
- முதல் நாள் இரவே வாசலில் கோலம் போடுதல் கூடாது.
மார்கழி மாதத்தில் பெண்கள் இதை மட்டும் செய்தால் போதும் நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |