Do’s and Don’ts in Audi Month in Tamil | ஆடி மாதத்தில் செய்ய கூடாதவை | ஆடி மாதம் என்ன செய்ய வேண்டும்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆடி மாதம் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.? என்பதை (Do’s and Don’ts in Audi Month in Tamil) பின்வருமாறு விவரித்துள்ளோம். ஆடி மாதம் தெய்வங்களை வழிபட உகந்த மாதம். இம்மாதத்தில் அணைத்து அம்மன் கோவில்களிலும் விசேஷமாக இருக்கும். இம்மாதத்தில் தெய்வங்களை வழிபட்டால் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் அதிகரிக்கும்.
அதிலும் இம்மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடிப்பூரம் போன்ற விசேஷக நாட்களில் விரதம் இருந்து தெய்வங்களை வழிபட்டால் மிகவும் நல்லது. அப்படிப்பட்ட புனிதமான ஆடி மாதத்தில் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்யக்கூடாது.? என்பதை நாம் அனைவருமே அறிந்துகொள்வது அவசியம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் Do’s and Don’ts in Audi Month in Tamil பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம்.
Do’s and Don’ts in Audi Month in Tamil:
What Not to Do in Aadi Masam in Tamil | ஆடி மாதம் செய்யக்கூடாதவை:
- ஆடி மாதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்தல் கூடாது.
- ஆடி மாதத்தில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க கூடாது.
- திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளை செய்தல் கூடாது.
- வீடு கிரகப்பிரவேசம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், வீடு குடி புகுதல் அல்லது வீடு இடமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- இம்மாதத்தில் பெண் பார்க்க செல்வதை தவிர்க்க வேண்டும்.
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் ஜவ்வரிசி பாயசம் செய்வது எப்படி..?
What to Do in Aadi Masam in Tamil | ஆடி மாதம் என்ன செய்ய வேண்டும்.?
- ஆடி மாதத்தில் தெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன் போன்றவற்றை செய்யலாம்.
- ஆடி மாதம் முழுவதும் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி வழிப்படலாம்.
- புதுமண தம்பதிகளுக்கு தாலி பெருக்கி போடலாம். திருமணமான பெண்கள் தாலி சரடு மாற்றி கொள்ளலாம்.
- இம்மாதத்தில் வீடு கட்டுமான பணிகளை செய்ய தொடங்கலாம்.
- யாகம், ஹோமம் போன்றவற்றை செய்யலாம்.
- ஆடிப்பெருக்கு அன்று புது வீடு வாங்க அல்லது நிலம் வாங்க முன்பணம் கொடுக்கலாம்.
- இம்மாதத்தில் உணவு தானம், வஸ்திர தானம் செய்யலாம்.
- ஆடி மாதம் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபடலாம்.
- கோவிலில் அம்மனுக்கு குங்குமம் அர்ச்சனை செய்யலாம். மேலும், கோவிலுக்கு குங்குமம் வாங்கி கொடுக்கலாம்.
- கோவில்களில் நடக்கும் விளக்கு பூஜையில் கலந்து கொள்வது நல்லது.
- ஆடி மாதம் பெண் தெய்வமான அம்பிகைக்கு உரிய மாதம் ஆகும். ஆகையால், ஆடி வெள்ளிக்கிழமை அன்று பெண் குழந்தை பிறந்தால் மிகவும் அதிர்ஷ்டம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |