Dos and Don’ts on Akshaya Tritiya in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.? (Dos and Don’ts on Akshaya Tritiya in Tamil) என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக, அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதனை தவிர்த்து வேறு என்ன செய்ய வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல், அன்றைய தினம் என்ன செய்ய கூடாது என்பது தெரிவதில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் Dos and Don’ts on Akshaya Tritiya in Tamil பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.
அட்சய திருதியை அன்று எப்படியாவது பல்லியை பார்த்து விடுங்கள்.! ஏன் தெரியுமா.?
அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.?
செய்ய வேண்டியவை:
- காலையில் எழுந்து குளித்து பூஜை செய்து கடவுளை வழிபட வேண்டும். பழங்கள், பருப்புகள், விதைகள், எண்ணெய்கள், பழுத்த காய்கறிகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்றவற்றை நெய்வேத்தியமாக படைத்து பிரசாதத்தை மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
- பூஜைகள், தானம் தர்மம் செய்தல், உதவுதல் போன்ற செயல்களை செய்ய வேண்டும். முக்கியமாக ஆடைகள் மற்றும் உணவுகள் போன்றவற்றை தானம் செய்யுங்கள்.
- அட்சய திருதியை அன்று சுப காரியங்களை தொடங்கலாம். அதாவது, திருமணம், புதிய முதலீடு செய்வது, புதிய வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்குவது போன்ற நல்ல காரியங்கள் அனைத்தையும் இன்றைய நாளில் செய்யலாம்.
- வீட்டிற்கு தேவையான மங்கள பொருட்கள் வாங்கலாம். அதாவது, அன்றைய தினத்தில் தங்கம், வெள்ளி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை வாங்கலாம்.
- பசு மாட்டிற்கு உணவு தானம் செய்ய வேண்டும்.
- அட்சய திருதியை நாளில் மகாலட்சுமியையும், மகா விஷ்ணுவையும் வழிபட வேண்டும்.
- பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய அட்சய திருதியை சிறப்பான நாள் ஆகும். ஆகையால், அன்றைய தினம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
- சங்கீதம், கல்வி மற்றும் கலைகள் போன்றவற்றை தொடங்க உகந்த நாள்.
அட்சய திருதியை அன்று எந்த ராசிக்காரர்கள் எந்த பொருள் வாங்க வேண்டும்.?
செய்யக் கூடாதவை:
- அட்சய திருதியை நாளில் அசைவ உணவுகளை உட்கொள்ள கூடாது.
- மது அருந்துதல் போன்ற தீய விஷயங்களை தவிர்க்க வேண்டும்.
- அட்சய திருதியை தீய சொற்களை பேசுதல் கூடாது. மேலும், அடுத்தவர்களிடம் கோபமாக நடந்துகொள்வது, அடுத்தவர்களுக்கு தீமை நினைப்பது மற்றும் சண்டை இடுவது போன்ற செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும்.
- வீட்டில் விளக்கேற்றாமல் இருக்க கூடாது. அதேபோல், வீட்டை இருளாக வைத்திருக்க கூடாது. லைட் போடாமல் இருக்க கூடாது.
- முக்கியமாக அன்றைய தினத்தில் குளிக்காமலும், அழுக்கான ஆடைகளுடனும் இருக்கக் கூடாது.
- குளிப்பதற்கு முன் துளசி இலைகளை பறிக்க கூடாது.
- அட்சய திருதியை நாளில் ஏதாவது வாங்க சென்று எதுவும் வாங்காமல் வெறுமனே வீடு திரும்ப கூடாது. அப்படி எதுவும் வாங்க முடியாதவர்கள் பூ, மஞ்சள், குங்குமம் போன்ற பொருட்களையாவது வாங்கி வர வேண்டும்.
- விஷ்ணுவையும், மகாலட்சுமியையும் தனித் தனியாக வழிபடக் கூடாது.
அட்சய திருதியை வாழ்த்துக்கள் 2024
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |