மகா சிவராத்திரி அன்று செய்ய கூடியதும், செய்யக்கூடாததும்..!

Advertisement

Dos and Don’ts on Mahashivratri in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சிவராத்திரி அன்று செய்ய கூடியதும், செய்யக்கூடாததும் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. மார்ச் 08 ஆம் தேதி மகா சிவராத்திரி வருகிறது. அன்றைய தினத்தில் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதும், இரவில் கண் விழித்து இருக்க வேண்டும் என்பதும் நமக்கு தெரியும்.

ஆனால், சிவராத்திரி அன்று எப்படி வழிபட வேண்டும்.? என்றும் சிவராத்திரி அன்று என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.? என்பது நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் பின்வருமாறு சிவராத்திரி அன்று செய்ய கூடியதும், செய்யக்கூடாததும் பற்றி விவரித்துள்ளோம். வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.

பண பிரச்சனை தீர வேண்டுமா..? அப்போ மகா சிவராத்திரி அன்று இதை செய்யுங்க..!

சிவராத்திரி அன்று செய்ய கூடாதவை:

சிவராத்திரி அன்று செய்ய கூடாதவை

  • மகா சிவராத்திரி அன்று இரவில் தூங்க கூடாது. அதாவது, சிவராத்திரி நாளில் பகல், இரவு மற்றும் அடுத்த நாள் பகல் வரையிலும் தூங்கக்கூடாது. உதாரணமாக, இந்த ஆண்டு, மார்ச் 08 ஆம் தேதி மகா சிவராத்திரி வருகிறது. மார்ச் 08 ஆம் தேதி காலை முதல் மார்ச் 09 ஆம் தேதி 09 ஆம் தேதி மாலை 06 மணிக்குள் மேல் தான் தூங்க வேண்டும். அதற்கு இடைப்பட்ட பகலிலும் இரவிலும் தூங்க கூடாது.
  • மகா சிவராத்திரி அன்று காலை முதல் மறுநாள் காலை வரை உபவாசம் இருக்க வேண்டும். அதாவது பட்டினி விரதம் இருக்க வேண்டும். இந்நேரங்களில் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும்.
  • சிவராத்திரி அன்று இரவில் கண் விழிக்கும்போது, மற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுப்பட கூடாது. அதாவது, போன் பார்ப்பது, பாடல் கேட்பது போன்ற செயல்களை செய்ய கூடாது. அதற்கு மாறாக, சிவனை மட்டுமே நினைத்து வழிபட வேண்டும்.

மகா சிவராத்திரி மந்திரம் | சிவன் காயத்ரி மந்திரம் தமிழ்

சிவராத்திரி அன்று என்ன செய்ய வேண்டும்:

  • சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு வீட்டில் அபிஷேகம் செய்ய வேண்டும்.
  • அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானிற்கு உகந்த அபிஷேக பொருட்களாக பால் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து, அபிஷேகங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
  • முக்கியமாக, சிவராத்திரி அன்று சிவபெருமானிற்கு வில்வ இலை கொண்டு வில்வ அபிஷேகம் செய்ய வேண்டும்.
  • சிவராத்திரி அன்று, சிவனின் நாமத்தை சொல்ல வேண்டும். அதிகாலை முதல் மறுநாள் காலை விரதம் முடிக்கும் வரை “ஓம் நமசிவாய” சிவாய நமக” நாமத்தை அடிக்கடி சொல்ல வேண்டும். மேலும், அன்றைய நாளில், தேவாரம் மற்றும் திருவாசகம் படிக்க வேண்டும்.
  • மிக முக்கியமாக, சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.45 PM முதல் 12.15 AM வரை அனைவரும் தியானம் செய்ய வேண்டும்.

மகா சிவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் விரதம் பலன்கள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement