தை அமாவசை அன்று செய்ய வேண்டியதும்.! செய்யக் கூடாததும் 2025

Advertisement

Do’s and Don’ts on Thai Amavasya in Tamil

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தை அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்யக்கூடாது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நாள் தை அமாவாசை. மாதந்தோறும் அமாவாசை வரும். அன்றைய தினம், முன்னோர்களை நினைத்து, விரதம் இருந்து அவர்களுக்கு படையல் இட்டு வழிபடுவது வழக்கம். ஆனால், மாதந்தோறும் வரும் அமாவாசையை விட, ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய மூன்று மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

புரட்டாசியில் வரும்  மகாளய அமாவாசைக்கு பித்ரு லோகத்தில் இருந்து, பூலோகத்திற்கு வரும் நம் முன்னோர்கள் மீண்டும் தை அமாவாசைக்கு  தான் பித்ரு லோகத்தில் செல்வார்கள். இந்த ஆண்டு, தை அமாவாசை ஆனது, தை 16 ஆம் தேதி (ஜனவரி 29) அன்று வருகிறது. அன்றைய தினம் நாம் முன்னோர்களை நாம் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்றும், சில விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

தை அமாவசையில் செய்ய வேண்டியவை | What to Do on Thai Amavasai in Tamil:

தை அமாவசையில் செய்ய வேண்டியவை

  • தை அமாவாசை அன்று, இறந்த நம் முன்னோர்களை நினைத்து நீர் நிலைகளில் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட  வேண்டும்.
  • கடல், ஆறு போன்ற நீர் நிலைகளுக்கு சென்று, மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயரை கூறி தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
  • தர்ப்பணம் கொடுத்து வீட்டிற்கு வந்ததும், முன்னோர்களின் படத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்து, சந்தனம் குங்குமம் வைத்து துளசி மாலை போட வேண்டும்.
  • தை அமாவாசை தர்ப்பணம் கொடுப்பவர்கள், அதிகாலையில் எழுந்து நீராடி விரதம் இருக்க வேண்டும்.
  • வீட்டில் அவர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வழிப்படலாம்.
  • தை அமாவாசைக்கு அகத்தி கீரை கொடுக்க வேண்டும்.
  • காகத்திற்கு எள் கலந்த உணவினை அளித்த பிறகு, பிறருக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.
  • மாலை நேரத்திலும் முன்னோர்களின் திருவுருவ படத்திற்கு முன் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
  • இப்படி செய்வதினால் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

தை அமாவசையில் செய்ய கூடாதவை | What to Not Do on Thai Amavasai in Tamil:

தை அமாவசையில் செய்ய கூடாதவை

  • தை அமாவாசை நாளில் மாமிசம் சாப்பிடக்கூடாது.
  • தர்ப்பணம் செய்யும்போது, கருப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்  கூடாது.
  • அன்றைய தினம் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • மாமிசம், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது.
  • கிழக்கு திசை பார்த்து அமர்ந்து தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
  • அன்றைய தினம் எந்தவொரு பூஜைகளையும் செய்ய கூடாது.
  • அமாவாசை நாளில், வீட்டை துடைத்து சுத்தம் செய்வது, பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது போன்ற செயல்கள் செய்யக் கூடாது.
  • மாலை நேரத்தில் தர்ப்பணம் கொடுக்க கூடாது.
  • காகம் உணவு சாப்பிட பிறகே நாம் சாப்பிட வேண்டும்.
  • தாய் தந்தையை இழந்த பெண்கள் தை அமாவாசை விரதம் இருக்கலாம். ஆனால், சுமங்கலி பெண்கள் எள்ளும் தண்ணீரும் இறைக்கக்கூடாது.

ஏன் முன்னோர்களை வணங்க வேண்டும்?

 ஒருவர் தன் பெற்றோருக்கும், தன் முன்னோர்கள், குல தெய்வத்தையும் வணங்காவிட்டால், அவர்கள் மற்ற தெய்வங்களை வணங்கி பலனில்லை. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த முன்னோர்களை தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டிய முக்கிய திதி தான் அமாவாசை.  ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதியில் நாம் விரதமிருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும், பெற்றோரை இழந்தவர்கள் தை, ஆடி, மகாளய அமாவாசை தினத்திலாவது நாம் விரதமிருந்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது அவசியம்.

உங்களால் முடிந்த வரை அன்னதானம் செய்வதும், எறும்பு, பசு, காகம், நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து வயிறு நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசி கிடைக்கும்

தை அமாவாசை தர்ப்பணம் செய்வது எப்படி?

அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது. தர்ப்பணம் அளிப்பவர்களின் வீட்டில் தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு இரு கைகளாலும் நீர் விடும் அர்க்கியம் செய்வது மிகுந்த நன்மை தரும். கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளையும் பூரணமாக பெறலாம். முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர் என்று சொல்வார்கள். அவர்களுக்கு செய்யும் தர்ப்பண பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் சூரியன் வழங்குகிறார். அந்த தேவதைகள் மறைந்த முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன என்பது ஐதீகம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement