தன்னை தானே கனவில் கண்டால் என்ன பலன்..

Advertisement

தன்னை தானே கனவில் கண்டால் |Unkalai Neengale Kanavil Kandal Enna Palan | Avamanam Paduvathu Pol Kanavu Vanthal

நம் அனைவருக்குமே வித விதமாக கனவுகள் வருகிறது அல்லவா..! அப்படி கனவுகள் வரும் போது அனைத்து கனவுகளும் பலிக்கும் என்று சொல்ல முடியாது. அது அந்த சமையத்தை பொறுத்து கனவுகள் மாறுபடும். அதற்கு ஏற்றது போல் தான் பலிக்கும். நாம் காணும் கனவுகள் சில கனவுகள் சிரிக்க வைக்கும் சில கனவுகள் நம்மை சிந்துக்க வைக்கும்.

அதேபோல் சில கனவுகள் நம்மை அழ வைக்கும். நமக்கு வரும் கனவுகள் ஏதோ ஒன்றை நமக்கு நினைவுபடுத்த தான் வருகிறது. அந்த வகையில் நாம் நிறைய கனவுகளை பற்றியும் பார்த்திருப்போம். அதேபோல் அதற்கான பலன்களை பற்றியும் பார்த்துக்கொண்டு தான் வருகிறோம். அதனை தொடர்ந்து இந்த பதிவில் உங்களை தன்னை தானே கனவில் கண்டால் என்ன பலன் Thannai Thane Kanavil Kandal என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களை நீங்களே கனவில் பார்த்தால்| Thannai Thaane Kanavil Kandal:

நீங்கள் உங்களை கனவில் பார்த்தால் உங்களுக்கு விரைவில் திருமணம் ஆகப் போகிறது என்று சொல்லபடுகிறது. உங்கள் மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையப்போகிறது என்றும் அர்த்தம்.

உங்களை யாராவது அழகுபடுத்துவது போல் கனவு கண்டால்:

உங்களை யாராவது அழகுப்படுத்துவது போல் கனவு கண்டால் அவர்கள் உங்களை ஏமாற்ற போகிறார்கள் என்று அர்த்தம்.

அதேபோல் உங்களை நீங்களே அலங்காரம் செய்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

அவமானப்படுவது போல் கனவு கண்டால்:

உங்களை யாராவது அவமானபடுத்துவது போல் கனவு கண்டால் எதிர்பாராத பிரச்சனைகள் வரும். அதைபோல் நஷ்டம் ஏற்பட போகிறது. தினந்தினம் கஷ்டங்களை சந்திக்க போகிறீர்கள் என்பது அர்த்தமாக இருக்கிறது.

அதேபோல் நீங்கள் வேற யாரையாவது அவமானம் படுத்துவது போல் கனவு கண்டால் நீங்கள் முடியவே முடியாது என்று நினைத்த காரியங்கள் நடக்கும்.

ஆசி பெறுவது போல் கனவு கண்டால்:

யாரிடமாவது ஆச பெறுவது போல் கனவு வந்தால் மறைமுட எதிரிகள் மூலம் பிரச்சனைகள் வரும் எண்டது அர்த்தம்.

இரத்தம் சிந்துவது போல் கனவு கண்டால்:

நீங்கள் இரத்தம் சிந்துவது போல் கனவு கண்டால் மிகப்பெரிய நன்மை நடக்கப்போகிறது என்று அர்த்தம். உங்களின் விடாமுயற்சியும், வெற்றியும் வெளி உலகத்திற்கு தெரியப்போகிறது என்று அர்த்தம்.

நீங்கள் இரத்தத்தை கனவில் கண்டால் உங்களால் ஏதோ ஒரு பாவச்செயல் நடக்க போகிறது என்பதை குறிக்கிறது.

தெரியாத நபர்களிடம் பேசுவது போல் கனவு கண்டால்:

நீங்கள் தெரியாத நபர்களிடம் பேசுவது போல் கனவு கண்டால் மற்றவர்கள் மூலம் நீங்கள் வளர்ச்சி அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.

அழகான பெண்ணை கனவில் கண்டால்:

அழகான பெண்ணை கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கபோகிறது என்று அர்த்தம்.

புறா கனவில் வந்தால் என்ன பலன்

தெரியாதவர்கள் கனவில் கண்டால்:

உங்கள் குழந்தைகளோ, மற்றவர்கள் குழந்தைகளை கனவில் கண்டால் செல்வம் பெரும்.

சகோதர்களுடன் இருப்பது போல் கனவில் கண்டால்:

சகோதர்களுடன் இருப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு இருக்கும் கடன்கள் தீரும். அதேபோல் தனலாபம் அதிகரிக்கும்.

தனியாக சாப்பிடுவது போல் கனவு கண்டால்: 

நீங்கள் கனவில் தனியாக உணவு அருந்துவது போல் கனவு கண்டால் நீங்கள் வாழ்க்கையில் கஷ்டத்தில் இருக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.

கண்ணாடியில் பார்ப்பது போல கனவு:

கண்ணாடியில் நீங்களே பார்த்து கொள்வது போல கனவு கண்டால் அவர்களுக்கு சீக்கிரமே திருமணம் நடக்க போகிறது என்று அர்த்தம். மேலும் அவர்களுக்கு வரன் பார்த்து கொண்டு போகியிருந்தால் திருமணத்திற்க்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என்று அர்த்தம்.

அவமானப்படுவது போல் கனவு கண்டால்:

தன்னை யாரோ அவமானப்படுத்துவது போல் கனவு கண்டால் அவர்களுக்கு மனது கஷ்டம் அடையும் வகையில் எதோ ஒரு பிரச்சனை வர போகிறது என்பதை குறிக்கிறது.

அறிவுரை பெறுவது போல கனவு:

நீங்கள் யாரோ ஒருவருக்கு அறிவுரை கூறுவது போல கனவு கண்டால் உங்களின் மனது கஷ்டம் அடைய , ம் வகையில் பிரச்சனை வரும்.

முத்தம் கொடுப்பது போல கனவு:

நீங்கள் யாருக்கோ முத்தம் கொடுப்பது போல கனவு கண்டால் வருத்தமான செய்தி வரும் என்பதை குறிக்கிறது.

குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement