துர்கா பஞ்சரத்னம் | Durga Pancharatnam Lyrics in Tamil..!

Advertisement

துர்கா பஞ்சரத்னம் | Durga Pancharatnam Lyrics in Tamil..!

பொதுவாக நாம் அனைவரும் காலையில் எழுந்த உடன் நமது ராசி மற்றும் நட்சத்திற்கு ஆன்மீக ரீதியாக என்ன பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தான் முதலில் பார்ப்போம். ஏனென்றால் அன்றைய நாள் எப்படிப்பட்ட நாளாக அமையப்போகிறது என்று எதிர்பார்ப்பு நம்மிடம் நிறையவே இருக்கிறது. அந்த வகையில் சிலர் காலையில் எழுந்த உடனே ஆன்மீக பாடல் வரிகளை தான் கேட்பார்கள். மேலும் தெய்வ வழிபாடு மேற்கொள்ளும் போதும் அத்தகைய தெய்வத்திற்கு உகந்த பாடல் வரிகளை பாடுவார்கள். அந்த வகையில் நாம் வணங்கும் ஒவ்வொரு தெய்வங்களும் பாடல் வரிகள் மற்றும் மந்திரங்கள் என இருக்கிறது. ஆகவே இன்று துர்கா பஞ்சரத்னம் பாடல் வரிகளை தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

Durga Pancharatnam Lyrics in Tamil:

தே த்⁴யானயோகா³னுக³தா அபஶ்யன்
த்வாமேவ தே³வீம் ஸ்வகு³ணைர்னிகூ³டா⁴ம் |
த்வமேவ ஶக்தி꞉ பரமேஶ்வரஸ்ய
மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதா³த்ரி || 1 ||

தே³வாத்மஶக்தி꞉ ஶ்ருதிவாக்யகீ³தா
மஹர்ஷிலோகஸ்ய புர꞉ ப்ரஸன்னா |
கு³ஹா பரம் வ்யோம ஸத꞉ ப்ரதிஷ்டா²
மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதா³த்ரி || 2 ||

பராஸ்ய ஶக்தி꞉ விவிதை⁴வ ஶ்ரூயஸே
ஶ்வேதாஶ்வவாக்யோதி³ததே³வி து³ர்கே³ |
ஸ்வாபா⁴விகீ ஜ்ஞானப³லக்ரியா தே
மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதா³த்ரி || 3 ||

தே³வாத்மஶப்³தே³ன ஶிவாத்மபூ⁴தா
யத்கூர்மவாயவ்யவசோவிவ்ருத்யா
த்வம் பாஶவிச்சே²த³கரீ ப்ரஸித்³தா⁴
மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதா³த்ரி || 4 ||

த்வம் ப்³ரஹ்மபுச்சா² விவிதா⁴ மயூரீ
ப்³ரஹ்மப்ரதிஷ்டா²ஸ்யுபதி³ஷ்டகீ³தா |
ஜ்ஞானஸ்வரூபாத்மதயாகி²லானாம்
மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதா³த்ரி || 5 ||

வேலுண்டு வினையில்லை பாடல் வரிகள்

ராகு கால துர்கா அஷ்டகம்:

வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே..!

உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே..!

செம்மையானவள் துர்கா ஜெபமும் ஆனவள்
அம்மையானவள் அன்புத் தந்தை ஆனவள்
இம்மையானவள் துர்கா இன்பம் ஆனவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே..!

உயிருமானவள் துர்கா உடலும் ஆனவள்
உலகமானவள் துர்கா எந்தன் உடமை ஆனவள்
பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்றும் பழுத்த துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே..!

துன்பம் அற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
துறையும் ஆனவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே..!

குருவும் ஆனவள் துர்கா குழந்தை யானவள்
குலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே
திருவும் ஆனவள் துர்கா திருசூலி மாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே..!

ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்
ராகு துர்கையே எனைக் காக்கும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே..!

கன்னி துர்கையே இதய கமல துர்கையே
கருணை துர்கையே வீரக் கனக துர்கையே
அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே
அன்பு துர்கையே ஜெய துர்க்கை துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே..!

காவிரிப் பெண்ணே வாழ்க..!

முருகன் அஸ்தோத்திரம் பாடல் வரிகள்

ப்ரபோ கணபதி பாடல்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement