துர்க்கை அம்மனின் ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகள்..!

Advertisement

Durgai Amman Songs Lyrics in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே தனது வாழ்க்கையை குறித்த பயம் இருக்கும். அப்படி நமது பயங்கள் அனைத்தையும் போக்கி நமது வாழ்க்கையை காப்பதற்காக பல கடவுள்கள் இருக்கின்றன. அப்படி நம்மை பாதுகாப்பதற்காக உள்ள பல கடவுள்களை ஒருவர் தான் இந்த துர்காதேவி. இவர் மிகவும் சாந்தமான ஒரு கடவுள் ஆனால் தன்னை நம்பி வந்தவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் பாதுகாப்பதற்கு முதலில் வரும் தெய்வம் இவராகத்தான் இருப்பார். அப்படிப்பட்ட இவரின் அருளை பெறுவதற்கு அவருடைய போற்றிகள், மந்திரங்கள், அஷ்டோத்திரம் மற்றும் சில பாடல்கள் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். எனவே தான் உங்களுக்கு உதவுவதற்காக ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இதனை முழுதாக படித்து துர்கா தேவியின் அருளும் ஆசிர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.

மஹா மிருத்யுஞ்சய மந்திரம் வரிகள்

Jaya Jaya Devi Lyrics in Tamil

Jaya Jaya Devi Lyrics in Tamil

ஜெய ஜெய தேவி-துர்கா தேவி சரணம்

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் (ஜெய ஜெய தேவி)

பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே (ஜெய ஜெய தேவி)

பசுமாட்டிற்கு இந்த ஒரு பொருளை தானமாக கொடுத்தால் தீராத கடனும் தீரும்

சங்கு சக்கரமும் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா…..
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும்
அவளே அங்கையர்க்கண்ணியும் அவளே
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்

தமிழ் கடவுளின் கந்தர் அலங்காரம் பாடல் வரிகள்

நல்ல நினைவாற்றலை அளிக்கும் மேதா ஸூக்தம் பாடல் வரிகள்

ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகள் Pdf

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement