கிழக்கு பார்த்த வீடு வாஸ்து பிளான்
East Facing House Vastu in Tamil – வணக்கம் நண்பர்களே திசைகளில் கிழக்கு, மேற்கு, வடக்கு, மற்றும் தெற்கு ஆகிய நான்கு திசைகள் இருக்கின்றன. வாஸ்து சாஸ்த்திரம் அடிப்படை படி இந்த நான்கு திசைகளை கொண்டுதான் பலன்கள் கணிக்கப்படுகின்றன, அந்த வகையில் கிழக்கு பார்த்த வீட்டு வாஸ்து பலன்களை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம். இந்த உலகிற்கே வெளிச்சத்தை கொடுக்கக்கூடிய சூரியனே கிழக்கு திசையில் தான் உதிக்கிறான். மேலும் கோயில்கள் கூட கிழக்கு திசையை பார்த்துதான் தலைவாசல் இருக்கிறது. சரி கிழக்கு பார்த்த வீடு வாஸ்து குறித்த பலன்களை இப்பொழுது படித்தறியலாமா..?
கிழக்கு நோக்கிய வீடுகள் இருந்தால் நல்லதா? கெட்டதா?
கிழக்கு நோக்கி வீடு இருப்பது மிகவும் நல்லதொரு விஷயம் தான். கிழக்கு நோக்கி வீடு அமைத்திருந்தால் நல்ல ஆற்றல்கள் நமக்கு கிடைக்கும். அதிக அதிர்ஷ்டம் மற்றும் அதிர்ஷ்டத்துடன் பெரியவர்களின் ஆசிர்வாதம் மற்றும் கடவுளின் அருளும் நமக்கு கிடைக்க கூடும். இருப்பினும் கிழக்கு நோக்கிய வாசல் அமைத்தாலும் நீங்கள் வாஸ்து முறை படி உங்களது வீட்டை கட்டவில்லை என்றாலும்.. தங்கள் வீட்டை சுற்றியுள்ள அமைப்புகள் சரியாக இல்லையென்றாலும் நல்ல பலன்கள் கிடைப்பதில் கொஞ்சம் சிக்கல் இருக்கும். ஆகவே உங்களது வீட்டினை வாஸ்து முறைப்படி சரியாக கட்டினால் கண்டிப்பாக அனைத்து வகையான பலன்களும் கிடைக்கக்கூடும்.
கிழக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம் பலன்கள் – East Facing House Vastu in Tamil:
உடல் ஆரோக்கியம்:
கிழக்கு நோக்கி வீட்டு வாசல் இருந்தால் அந்த வீடுகளில் வசிப்பவர்களின் தந்தைக்கு உடல்நலம் நன்றாக இருக்கும். இதற்கு என்ன காரணம் என்றால் ஜோதிட ரீதியாக சூரியன் தந்தைக்கு காரகனாகிறார். ஆகவே உங்கள் வீட்டில் வசிக்கும் தந்தைக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மேலும் அந்த வீட்டில் வசிக்கும் அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் உடல்நலனும் நன்றாக இருக்கும்.
கிழக்கு பார்த்த வீடு எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக்கொடுக்கும்?
மேஷம், சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் கிழக்கு திசையை நோக்கிய தலை வாசல் கொண்ட வீடுகளில் வசிப்பதால் அனைத்து விதமான நல்ல பலன்களும் கிடைக்கும் மேலும் சிவபெருமானுடைய நல்லருள் முழுமையாக கிட்டும்.
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்:
பொதுவாக எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் வசிக்கும் குழந்தைகள் பிள்ளைகள் படிக்கின்ற போது கிழக்கு திசையை பார்த்தவாறு படிக்கும் சூழ்நிலையை அவர்களின் வீடுகளில் ஏற்படுத்தி தருவது, அவர்களை கல்வியில் சிறக்கச் செய்யும். ஆகவே கிழக்கு திசையை பார்த்தவாறு இருக்கும் வீடுகளில் வசிப்பவர்களின் குழந்தைகள் சூரிய பகவானின் நல்லருளால் கல்வியில் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள்.
கிழக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்:
கிழக்கு பார்த்த வீடு வேறு யாருக்கெல்லாம் நல்ல பலன்களை கொடுக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.. அரசாங்க ஊழியர்கள், அரசாங்க உயரதிகாரிகள் கிழக்கு திசை வாயில் கொண்ட வீடுகளில் வசிப்பது அவர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
நீண்ட காலமாக நோய் பாதிப்பால் அவதிப்படுபவர்கள் கிழக்கு வாயில் கொண்ட வீடுகளில் வசித்து வரும் போது தீராத நோய்கள் நீங்க தொடங்கி உடல் நலம் மேம்படும்.
வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |