எலி கனவில் வந்தால் என்ன பலன் | Eli Kanavil Vanthal Enna Palan..!

Advertisement

எலி கனவில் வந்தால் என்ன பலன் | Eli Kanavil Vanthal Enna Palan..!

ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் நாம் நல்ல தூக்கத்தினை தூங்கினால் மட்டுமே நம்முடைய உடல் மற்றும் மூளை ஆனது ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் நாம் தினமும் தூங்கும் போது எண்ணற்ற கனவுகள் வரும். அத்தகைய கனவுகள் அனைத்திற்கும் ஆன்மீகத்தில் ஒவ்வொரு பலன்கள் இருப்பது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நமக்கு வரும் கனவுகள் அனைத்திற்கும் நன்மை மற்றும் தீமை என இரண்டும் கலந்த ஒன்றாக தான் கருதப்படுகிறது. ஆகவே இன்று எலி பற்றிய கனவுகள் வந்தால் என்ன பலன் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள..!

எருமை கனவில் வந்தால் என்ன பலன்

எலி கனவில் வந்தால் என்ன பலன்:

உங்களுடைய கனவில் ஒரு எலி வந்தாலோ அல்லது பல எலிகள் தோன்றினாலோ ஏதோ ஒரு பிரச்சனை வரப் போகிறது என்பதை முன்கூட்டியே உணர்த்தும் அர்த்தமாக கூறப்படுகிறது. ஆகையால் இந்த கனவு வந்தால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

எலி கடித்தால் என்ன பலன்:

கனவில் எலி கடிப்பது போல் உங்களுக்கு வந்தால் அது கெட்ட அறிகுறிகளை குறிக்கிறது. அதாவது உங்களுடைய வாழ்க்கையில் நிதிநிலை மற்றும் நெருக்கமானவர்கள் மூலமாக பிரச்சனைகள் வரபோகிறது என்பதை உங்களுக்கு உணர்த்தி அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என்பதே இதற்கான அர்த்தமாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

கனவில் எலி ஓடினால் என்ன பலன் தமிழ்:

கனவில் எலிகள் ஓடுவது போல் வந்தால் அது ஏதோ ஒன்று உங்களிடம் திரும்ப வரபோகிறது என்பதை குறிக்கும் பலனாக கூறப்படுகிறது. மேலும் உங்களிடம் திரும்ப வரப்போவது பொருள் மற்றும் வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

வெள்ளை எலி கனவில் வந்தால்: 

வெள்ளை எலியை கனவில் காண்பது மிகவும் நன்மையான பலனை குறிக்கும் விதமாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. அதாவது உங்களுடைய வாழ்க்கையில் காதல் உண்டாகப்போகிறது என்பதையும், அது திருமணம் வரை நீடித்து நல்ல வாழ்க்கை  துணையினை ஏற்படுத்தும் விதமாக குறிக்கிறது.

எலியை கொல்வது போல் கனவு:

கனவில் எலியை கொல்வது போல் உங்களுக்கு வந்தால் வாழ்க்கையில் ஏதோ ஒரு கெட்ட செயல் நடப்போகிறது என்பது பலன் ஆகும். இதோடு மட்டும் இல்லாமல் அந்த செயலால் உங்களுக்கு கவலை மற்றும் மகிழ்ச்சி நிலாவது என்பதும் அர்த்தமாகும்.

காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement