வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எந்த ராசிக்காரர்கள் கருங்காலி அணியலாம் என்று தெரியுமா..?

Updated On: June 15, 2024 4:27 PM
Follow Us:
endha rasikarargal karungali malai aniyalam in tamil
---Advertisement---
Advertisement

Endha Rasikarargal Karungali Malai Aniyalam in Tamil

ஆன்மீகத்தை பொறுத்தவரை எல்லாம் செயலையும் எல்லாரும் செய்ய இயலாது. ஏனென்றால் ஜோதிடத்தின் சிறப்பே காலச்சக்கரத்தில் உள்ள 12 ராசிகளுக்கும் அத்தகைய ராசிகளுக்கு என்று உள்ள நட்சத்திரங்களின் படியே செய்யும் செயல்கள் முதல் வணங்கும் தெய்வம் என இவை அனைத்தும் அடங்குகிறது. அதேபோல் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எது உகந்தது..! எது உகந்தது அல்ல..! என இதுபோன்ற முறைகளும் உள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் மிகவும் சிறப்பானதாக சொல்லக்கூடிய கருங்காலி மாலை எந்த ராசியினர் அணியலாம் என்றும், எந்த ராசியினர் அணியக்கூடாது என்றும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!

கருங்காலி மாலை யார் அணியலாம்:

கருங்காலி மாலை ஆனது ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகம் என இவை இரண்டிலும் பல வகையான நன்மைகளை வழங்குகிறது. ஆகவே இப்படி சிறப்பு வாய்ந்த கருங்காலி மாலையினை பெண்கள், ஆண்கள், வயதில் மூத்தவர்கள் என யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அணிந்து கொள்வது வேண்டுமானாலும் எளிமையாக இருந்தாலும் கூட இதனை அணிந்து இருக்கும் போது எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை தெளிவாக தெரிந்து இருப்பது அவசியம்.

கருங்காலி மாலை எந்த ராசிக்காரர் அணியலாம்:

கருங்காலி மாலை எந்த ராசிக்காரர் அணியலாம்

 

கருங்காலி மாலை முருகப்பெருமானுக்கு உகந்ததாக இருப்பதனால் இதனை அனைவரும் அணியலாம் என்று கூறுவார்கள். இவ்வாறு இருந்தாலும் கூட சில ராசியினருக்கு இது சிறப்பான ஒன்றாகவும் இருக்கிறது.

ராசிக்கார்கள்:

  • விருச்சிகம்
  • மிதுனம்
  • மேஷம்

நட்சத்திரக்காரர்கள்:

  • திருவோணம்
  • கேட்டை
  • அனுஷம்
  • மிருகசீரிஷம்
  • திருவாதிரை
  • அஸ்வினி
  • விசாகம்

மேல் சொல்லப்பட்டுள்ள ராசிக்காரர்கள் மற்றும் நட்சத்திரக்காரர்கள் இந்த மாலையினை அணிவது இன்னும் கூடுதல் சிறப்பினை அளிக்கிறது.

கருங்காலி மாலை எப்போது அணிய கூடாது:

இரவு தூங்கும் போது, துக்க வீடுகளுக்கு செல்லும் போது, அசைவம் சாப்பிடும் போது என இதுபோன்ற நேரங்களில் எல்லாம் கருங்காலி மாலை அணியக்கூடாது.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now