இந்த விரலில் விபூதி பூசினால் கஷ்டம் மேல் கஷ்டம் வருமாம்..

Advertisement

விபூதி பூசுவது எப்படி.?

பெண்களாக இருந்தால் நெற்றியில் பொட்டு வைத்து அதன் மேலே குங்குமம் அல்லது சந்தனம் வைப்பார்கள். அதுவே ஆணாக இருந்தால் சந்தனம் அல்லது விபூதியை வைப்பார்கள். நெற்றியில் குங்குமம் அல்லது விபூதி வைத்தால் தான் நம் முகம் பிரகாசமாகவும், லட்சணமாகவும் இருக்கும். அதுவே திருமணமான பெண்களாக இருந்தால் தலை வகுடுக்கும், நெற்றியின் மேலும் வைப்பார்கள். இதில் நீங்கள் விபூதி அல்லது குங்குமம் வைப்பதில் ஆன்மிகத்தில் சில முறைகள் கூறப்பட்டிருக்கிறது. அவற்றை பற்றி எல்லாம் நமக்கு தெரிந்திருக்காது. அதனால் தான் இந்த பதிவில் விபூதியை எந்த விரலில் பூச வேண்டும், எந்த விரலில் பூசினால் என்ன பலன் கிடைக்கும் என்று தெறித்து கொள்வோம் வாங்க..

எந்த விரலில் விபூதி பூசினால் என்ன பலன் கிடைக்கும்:

விபூதி பூசுவது எப்படி

கட்டை விரல்:

கட்டை விரலில் அவர்களே விபூதி பூச மாட்டார்கள். ஆனால் மற்றவர்களுக்கு பூசும் போது கட்டை விரலில் தான் பூசி விடுவார்கள். கட்டை விரலால் விபூதி பூசினால் தீராத நோய்கள் வருமாம்.

ஆள்க்காட்டி விரல்:

பெரும்பாலானவர்கள் விபூதி பூசுவதற்கு பயன்படுத்த கூடிய விரலாக ஆள்க்காட்டி விரல் இருக்கிறது. ஆள்க்காட்டி விரலால் விபூதி பூசினால் உங்களிடம் உள்ள பொருட்கள் அழிந்து போகுமாம்.

நெற்றியில் திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் வைப்பதில் இப்படி ஒரு அறிவியல் காரணம் இருக்கிறதா..!

நடு விரல்:

நாம் விபூதியாக இருந்தாலும் சரி, குங்குமமாக இருந்தாலும் தட்டில் இருந்து எடுக்கும் போதே நடு விரலால் தா எடுத்து பூசுவோம். நடு விரலால் விபூதியை பூசினால் வாழ்க்கை நிம்மதி இல்லாமல் கஷ்டம் அதிகரிக்கும்.

மோதிர விரல்:

மோதிர விரலால் தான் விபூதியை பூச வேண்டுமாம். இந்த விரலை பயன்படுத்தி விபூதி பூசுவதால் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.

சுண்டு  விரல்:

சுண்டு விரல் மூலம் விபூதி பூசினால் கலி பித்த தோஷம் ஏற்படும்.

மோதிர விரல் மற்றும் கட்டை விரல்:

நீங்கள் விபூதியாக இருந்தாலும் சரி, குங்குமமாக இருந்தாலும் சரி மோதிர விரல் மற்றும் கட்டை விரல் இரண்டாலும் எடுத்து மோதிர விரலால் போட வேண்டும். இப்படி பூசுவதால் உலகமே உங்கள் கையில். அதாவது நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் வந்து முடிவடையும்.

நெற்றியில் விபூதி எப்படி பூச வேண்டும் என்று தெரியுமா.?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement