எங்கே ஓடுது எங்கே ஓடுது ஐயப்பன் பாடல் வரிகள்..! | Enge Oduthu Song Lyrics in Tamil

Advertisement

Enge Oduthu Song Lyrics in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம்.. இப்பதிவில் நாம் ஐய்யன் ஐயப்பனின் பாடல்களில் ஒன்றான எங்கே ஓடுது எங்கே ஓடுது ஐயப்பன் பாடல் வரிகள் பற்றி பார்க்கலாம். ஐயப்பன் அல்லது சாஸ்தா அல்லது தர்மசாஸ்தா அல்லது மணிகண்டன் இந்து கடவுள்களில் ஒருவர் ஆவர். இந்த ஐயப்பனை தரிசிக்க ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கும் செல்வார்கள்.

அதாவது, ஒவ்வொரு ஐயப்பன் பக்தரும் கார்த்திகை மாத தொடக்கத்தில் ஐயப்பனுக்கு மாலை போட்டு 1 மண்டலம் விரதம் இருந்து மார்கழி மாத கடைசியில் சபரிமலைக்கு செல்வார்கள். இவர்கள் விரதம் இருக்கும் ஒவ்வொரு நாளும் மிகவும் சுத்தமாக இருப்பார்கள். ஏனெற்றால் ஐயப்பன் அந்த அளவிற்கு சக்தி உடையவன். எனவே, ஐய்யன் ஐயப்பனின் எங்கே ஓடுது எங்கே ஓடுது ஐயப்பன் பாடல் வரிகளை பின்வருமாறு உச்சரிக்கலாம் வாங்க.

எங்கே ஓடுது எங்கே ஓடுது ஐயப்பன் பாடல்:

எங்கே ஓடுது எங்கே ஓடுது ஐயப்பன் பாடல்

எங்கே ஓடுது எங்கே ஓடுது கூட்டமெல்லாம் எங்கே ஓடுது
அங்கே ஓடுது அங்கே ஓடுது சந்நிதானம் நோக்கி ஓடுது!

எங்கே ஓடுது எங்கே போவுது சாமி மார்கலெல்லாம் எங்கே போவுது
ஹரிஹரன் சுதனின் தரிசனம் காண சபரிமலை நோக்கி ஓடுது!

கன்னிமூல கணபதிக்கு வந்தனம்
சொல்லி குருநாதன் துணையோடு போகணும்
சந்நிதானம் நடை திறந்த காரணம்
சாமி மார்கலெல்லாம் அவனைப் பார்க்க முந்தணும்!

வனம் ஆளும் தேவதைய நினைக்கணும்
நம்ம வாவரரின் பேரைச் சொல்லி ஓடனும்
ஓடும் போது சரணகோஷம் விளிக்கனும்
அந்த மந்திரமே நம்மை சேர்க்கும் சீக்கிரம்!

ஐயப்பன் பக்தி பாடல் வரிகள்

எங்கே ஓடுது எங்கே ஓடுது கூட்டமெல்லாம் எங்கே ஓடுது
அங்கே ஓடுது அங்கே ஓடுது சந்நிதானம் நோக்கி ஓடுது!

கல்லோ முள்ளோ குண்டோ குழியோ போடும் சரணகோஷம் தாண்ட வைக்குது
கறியோ புலியோ உலவிடும் மலையே சுரிகாயுடன் சரணம் தூர ஒட்டுது!

தாவளம் எங்கும் பஜனைகள் முழக்கம் கண்ணிசாமிகளின் பரவசம் ஆட்டம்
மீண்டும் ஏற்றம் ஓட்டம் தள்ளாட்டம் சரணம் விலிக்க விலிக்க யாவும் முன்னேற்றம்!

எங்கே ஓடுது எங்கே ஓடுது கூட்டமெல்லாம் எங்கே ஓடுது
அங்கே ஓடுது அங்கே ஓடுது சந்நிதானம் நோக்கி ஓடுது!

ஓட்டம் எடுத்த பாதங்கள் எல்லாம் பதினெட்டாம் படி மேல ஏறுது
எல்லாம் துறந்து எல்லாம் கடந்து வந்ததை மறந்து தவழ்ந்து ஏறுது!

படிகளை தொட்டே கண்களில் ஒற்றியே சரணம் விளித்தபடி ஊர்ந்து ஏறுது
இருமுடியுடனே பலபடி கடந்தே கொடி மரம் வணங்கியபடி முன்னே ஓடுது!

ஓடி ஓடி தளர்ந்த கூட்டம் ஐயன் ஜோதியில் கலந்து மயங்குது
நாடி நாடி வந்திடுவோரை அவன் இரு கண்களோ அளவெடுத்தது!

எங்கே ஓடுது எங்கே ஓடுது கூட்டமெல்லாம் எங்கே ஓடுது
மலையிரங்குது பம்பா நதியை அடையுது ஐயப்பனின் பிரிவில் ஏங்குது!

இறங்கும் போதிலும் சரணம் விளிக்கனும் சாமி வீண் பேச்சு தவிர்த்து நடக்கணும்
குருவின் தயவினால் அய்யனின் ஆசி பெற்றதற்கு நன்றி சொல்லணும்!

ஸ்வாமியப்பா சரணமப்பா
ஐயப்பா சரணம் ஸ்வாமியப்பா!!

பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement