முருகன் புகழ் பாடும் என்ன கவி பாடினாலும் பாடல் வரிகள்…

Advertisement

என்ன கவி பாடினாலும்

நம்மில் பெரும்பாலானோர் ஆன்மிக ஈடுபாடு அதிகம். நாம் நமது இஷ்ட தெய்வத்தை வணங்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையை கடைபிடிப்போம். அந்த வகையில் கடவுளை வணங்கும் போது கடவுள் புகழ் பாடி வணங்குவர். சிலர் தீபாராத்தனை மட்டும் காட்டி வணங்குவர்.அனைவரும் அவர்களுக்கு பிடித்த கடவுளை நினைத்து பூஜை செய்து வழிபடுவார்கள். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு கடவுளையும் போற்றும் வகையில் பாடல் வரிகள் உள்ளது. இப்பாடல்கள் எல்லாம் அக்காலத்தில் கடவுளால் பயனைடைந்தவர்கள் கடவுளை போற்றி பாடியுள்ள பாடல்கள் ஆகும்.

எனவே கடவுளை வணங்கி வழிபடும் நேரத்தில் கடவுளுக்கு உரிய பாடல்களை நாம் பாடி வணங்கும் போது உடல் ஆரோக்கியமாகவும் எவ்வித கஷ்டமும் இல்லாமலும் இருக்கும் என்பது ஐதீகம். அப்படி திருச்செந்தூர் சுப்ரமணியரை போற்றி, ஆனையம்பட்டி சர் சிஎன் ஆதி சேஷ ஐயர் இசையமைத்து பாடகி அருணா சாய்ராம் பாடிய என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை பாடல் வரிகளை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். எனவே முருகனை வணங்கும் நேரத்தில் இப்பாடலை பாடி கடவுள் முருகனின் ஆசியை பெறுங்கள். என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை பாடல் வரிகள் பின்வருமாறு காணலாம்.

என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை | Enna Kavi padinalum song Lyrics in tamil:

என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா முருகா
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா முருகா
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை

என்ன கவி பாடினாலும் பாடல் வரிகள்:

என்ன கவி பாடினாலும் பாடல் வரிகள்

அன்னையும் அறியவில்லை
அன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை
அன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை உன்
மாமியும் பார்ப்பதில்லை மாமனோ கேட்பதில்லை
அன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை உன்
மாமியும் பார்ப்பதில்லை மாமனோ கேட்பதில்லை
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா முருகா

கருங்காலி மற்றும் செங்காலி மாலை அணிபவரா நீங்கள் அப்போ கண்டிப்பா இத தெரிந்து கொள்ளுங்கள்…

Enna Kavi padinalum song Lyrics in tamil:

Enna Kavi padinalum song Lyrics in tamil

அட்சரலட்சம் தந்த அண்ணல் போஜராஜன் இல்லை
அட்சரலட்சம் தந்த அண்ணல் போஜராஜன் இல்லை
பட்சமுட்னே அழைத்து பறிசளிக்க யாருமில்லை
அட்சரலட்சம் தந்த அண்ணல் போஜராஜன் இல்லை
பட்சமுட்னே அழைத்து பறிசளிக்க யாருமில்லை
இ ஜகத்தில் நீ நினைந்தால் முருகா
முருகா
இ ஜகத்தில் நீ நினைந்தால் எனகோ குறைவில்லை
இஜகத்தில் நீ நினைந்தால் எனகோ ஓர் குறைவில்லை
இலட்சியமோ உன்னக்கு உன்னை நான் விடுவதில்லை
இலட்சியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை

என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா முருகா
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை

ஸ்ரீ மஹா விஷ்ணுவின் 10 தசாவதாரத்தின் காயத்ரி மந்திரங்கள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement