எண்ணெய் கனவு பலன்கள்

Advertisement

Ennai Kanavu Palangal in Tamil

பொதுவாக கனவு என்பது இயற்கையானது, எல்லாருக்கும் கனவு என்பது ஏற்படும். அதிலும் விடியற்காலையில் கனவு கண்டால் பலிக்கும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறுவார்கள். அதனாலயே நாம் கண்ட கனவிற்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கு ஒவ்வொரு மாதிரியான அர்த்தங்கள் இருக்கிறது. நம்முடைய வலைத்தளத்தில் எல்லா வகையான கனவிற்கு அர்த்தங்களை பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் எண்ணெய் கனவு பலன்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

எண்ணெய் வாங்குவது போல கனவு:

எண்ணெய் வாங்குவது போல் கனவு கண்டாலோ அல்லது எண்ணெய் தேய்த்து குளிப்பது போல கனவு கண்டாலோ நீங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதனை குறிக்கிறது.

தேங்காய் எண்ணெய் கனவில் வந்தால்:

தேங்காய் எண்ணெய் கனவில் வந்தால்

தேங்காய் எண்ணெய் கனவில் கண்டால் உங்களின் வாழ்க்கையில் உள்ள எல்லா செயல்களையும் கவனமாக செய்ய வேண்டும். அப்படி நீங்கள் செயல்களில் ஏதவாது பிரச்சனை ஏற்பட்டால் அதிலிருந்து நீங்கள் வெளிவருவதற்கு ஆன்மிக ஈடுபாடு உதவி செய்யும் என்பதனையும் குறிக்கிறது.

நல்லெண்ணெய் கனவில் வந்தால்:

 நல்லெண்ணெயை கனவில் காண்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. உங்களுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு உயர போகிறது என்பதை உணர்த்துகிறது.  

மண்ணெண்ணெய் கனவில் வந்தால்:

மண்ணெண்ணெயை கனவில் காண்பது உங்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது. மேலும் கனவு காண்பவரின் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்பட போகிறது என்பதையும் குறிக்கிறது.

அதுமட்டுமில்லாமல் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதனையும் உணர்த்துகிறது.

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது போல கனவு கண்டால் அக்கனவு காண்பவருக்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது.

நோயில் பாதிக்கப்பட்டவர் எண்ணெய் தேய்ப்பது போல கனவு கண்டால் அந்த நோயிலிருந்து விடுபடுவீர்கள் என்பதையும் உணர்த்துகிறது.

எண்ணெய் கொடுப்பது போல் கனவு:

எண்ணெய் கொடுப்பது போல கனவு காண்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் அந்த எண்ணெயை உறவினர்களுக்கு கொடுப்பது போல கனவு கண்டால் அந்த உறவு ஆனது பலப்படும் என்பது அர்த்தமாக இருக்கிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement